உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை

நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரான்ஸ் வலதுசாரி கட்சித் தலைவர் மரியன் லீ பென், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் எதிர்க்கட்சியாக இருப்பது, நேஷனல் ராலி (RN) கட்சியாகும். வலதுசாரிக் கொள்கைகளை பின்பற்றும் இந்த கட்சி, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நேர் எதிரான கொள்கைகளை பின்பற்றக் கூடியது.இந்தக் கட்சியின் தலைவராக இருப்பவர் மரியன் லீ பென். இவரது தந்தையால் தொடங்கப்பட்ட இந்த கட்சியை பெண்மணியான மரியன் வழிநடத்தி வருகிறார்.தற்போது இந்த கட்சி பிரான்ஸ் நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், மரியன், ஐரோப்பிய நிதியை முறைகேடாக கட்சிக்கு பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, மரியன் லீ பென் குற்றவாளி என அறிவித்தார். அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.அவருக்கு மூன்று லட்சம் யூரோ மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல், நேரடியாக இந்த தடை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வரும் 2027ம் ஆண்டு பிரான்ஸ் தேர்தலில் மரியன் போட்டியிட வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

visu
மார் 31, 2025 18:30

மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாமல் உடனடியாக தடை அமல் இந்த நாடுகள் இந்தியா ஜனநாயகத்தை பற்றி கருத்து சொல்கின்றன அவர் வெல்லக்கூடிய வாய்ப்பு என்றது அவர்மேல் உடனே வழக்கு விரைந்து தீர்ப்பு எல்லாம் 2027 நோக்கி


Barakat Ali
மார் 31, 2025 17:54

இவரது நடவடிக்கைகள் அப்படியே 2 ஜி யம்மாவின் நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன ..... நம்மூர் பெண் பெருச்சாளி தப்பித்தது ..... இவர் சிக்கிக்கொண்டார் ..... அதுதான் வித்தியாசம் .....


என்றும் இந்தியன்
மார் 31, 2025 17:26

உடனே இந்தியா வந்து திமுகவில் இல்லை காங்கிரசில் சேரவும் உங்கள் நிதி முறைகேடு வழக்கு வாபஸ் வாங்கப்படும் அதுவும் உங்கள் தந்தை கட்சிக்கு வாரிசுதாரராக இருப்பது இன்னும் அதிக மதிப்பெண் தருகின்றது இப்படி சேருவதற்கு


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 31, 2025 16:52

இந்தியா வந்து திமுகவில் சேர்ந்திருக்கலாம் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை