உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முதல் டெஸ்ட்: 295 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி

முதல் டெஸ்ட்: 295 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பும்ரா 5, ஹர்ஷித் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர். பின் 46 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்திய அணி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fjxylna6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற, ராகுல், ஜெய்ஸ்வால் அசத்தினர். ராகுல் 77 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேட்சானார். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100 ரன்கள் விளாச, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

விக்கெட் சரிவு

இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அடி விழுந்தது. நேற்றைய 3வது நாள் முடிவில் 12 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. இன்று (நவ.,25) 4வது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா (4) சிராஜ் பந்தில் ரிஷாப் பன்டிடம் கேட்சானார். அடுத்து ஸ்மித், ஹெட் கூட்டணி சேர்ந்தனர். எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 17 ரன்னில் அவுட்டானார். ஹெட், மார்ஷ் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. அரைசதம் கடந்த ஹெட் 89 ரன்னில் வெளியேறினார். மார்ஷ் 47 ரன்னில் நிதிஷ் ரெட்டி வேகத்தில் போல்டானார். அலெக்ஸ் கேரி 36 ரன்னில் போல்டாக, ஆஸ்திரேலிய அணி 238 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றிப்பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது டெஸ்ட், அடிலைட் ஓவல் மைதானத்தில் டிச.,6ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
நவ 25, 2024 20:54

இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள் கூறும் இந்நேரத்தில், இனி வரும் போட்டிகளிலும் இதேபோல் சிறப்பாக ஆட வேண்டுகிறேன். இந்த வெற்றியால் தலைக்கணம் அதிகரிக்க கூடாது. அது மிக மிக முக்கியம்.


ديفيد رافائيل
நவ 25, 2024 16:12

Australia நாட்டில் first time Indian cricket team team match win ?


Kumar Kumzi
நவ 25, 2024 17:25

நீ என்ன அரேபியனா


முக்கிய வீடியோ