உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துப் பெண் பலாத்காரம்: வீடியோ பதிவு செய்த கயவர்கள் கைது

வங்கதேசத்தில் ஹிந்துப் பெண் பலாத்காரம்: வீடியோ பதிவு செய்த கயவர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண்ணை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அப்போது முதல் அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் ஹிந்துக்களுக்கு எதிராக, அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து அங்கு ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுபன்மையின மக்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lcf3bwok&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அங்கு ஹிந்து பெண் ஒருவர் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த விவரம்: வங்கதேசத்தின் கொமி லா மாவட்டத்தின் ராம்சத்ரபூர் பன்சிகட்டா கிராமத்தை சேர்ந்த பஜிர் அலி(36) என்பவன், அதே கிராமத்திற்கு புலம்பெயர்ந்த ஒருவரின் மனைவியை பலாத்காரம் செய்துள்ளான். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் பஜிர் அலியை பிடித்து தாக்கினர். அவர்களிடம் இருந்து பஜிர் அலி தப்பியோடினான்.அங்கிருந்த சிலர், பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவில், நிர்வாணமாக இருக்கும் பாதிக்கப்பட்ட அந்த பெண் , தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிய காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார், பஜிர் அலி மற்றும் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KRISHNAVEL
ஜூலை 20, 2025 14:29

சிரியாவுக்கு பொங்குறானுக, பாலஸ்தீனத்திற்கு பொங்குறானுக, ஏன் ஈரானுக்கு கூட பொங்குனானுக, இந்தியாவில் உபி இல் ,மற்றும் காஷ்மீரில் சிறுபான்மை பெண்ணுக்காக போராட்டம் பண்ணுனாங்க , ஆனால் பாதிக்க பட்டது இந்து பெண்ணாக இருப்பதால் இங்கு இந்தியாவில் அனைவரும் பாஜக உட்பட அனைவரும் ,இந்த்துக்களின் உயிரை ,மானத்தை துச்சமென நினைக்கிறார்கள்