உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  போரை விரும்பும் பாக்., ராணுவ தளபதி மாஜி பிரதமர் இம்ரான் கான் சகோதரி புகார்

 போரை விரும்பும் பாக்., ராணுவ தளபதி மாஜி பிரதமர் இம்ரான் கான் சகோதரி புகார்

இஸ்லாமாபாத்: ''பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் தான் இந்தியாவுடனான போருக்கு காரணம்,'' என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலிமா கான் குற்றஞ்சாட்டினார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2018- - 2022- வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாக்., தெஹ்ரீக் - -இ - -இன்சாப் கட்சியின் தலைவருமான இவர், பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியை இழந்தார். புதிதாக பதவியேற்ற பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, 100க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தது. ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டு, 2023 ஆக., முதல், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். இம்ரான் கான் இறந்து விட்டதாக செய்தி பரவிய நிலையில், அடியாலா சிறை நிர்வாகம் அதை திட்டவட்டமாக மறுத்தது. சிறையில் உள்ள அவரை, அவரது சகோதரி உஸ்மா கான் சமீபத்தில் சந்தித்தார். பின் , செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''இம்ரான் கான் நலமுடன் உள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ' 'மன ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளார். அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அனைத்திற்கும் ராணுவ தளபதி அசிம் முனீர் தான் கார ணம்,'' என்றார். இம்ரான் கானின் மற்றொரு சகோதரி அலிமா கான் கூறுகையில், ''அசிம் முனீர் ஒரு இஸ்லாமிய பழமைவாதி. இதனால் தான் அவர் இந்தியாவுடன் போர் செய்ய விரும்புகிறார். ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின் நடந்த சண்டைக்கும் அவர் தான் காரணம். '' அவரது இஸ்லாமிய பயங்கரவாதமும், பழமைவாதமும் இஸ்லாத்தை நம்பாதவர்களுக்கு எதிராகப் போராட அவரை கட்டாயப்படுத்துகின்றன. இம்ரான் கான் இந்தியாவுடனும், பா.ஜ.,வுடனும் நட்பு பாராட்ட முயன்றார். ஆனால் ஆசிம் முனீர் போன்றவர்கள் இருக்கும் வரை அது ஒருபோதும் நடக்காது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ