உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தனது 100 வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அமெரிக்காவின் 39 வது அதிபரான இவர் ஒரு வருட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பிளெய்ன்ஸ், கியோர்கியாவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.,29) ல் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜிம்மி கார்டர் 1977 ம் ஆண்டு முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக பணியாற்றி வந்தார். மனித நேயமிக்க சிறந்த சேவைக்காக 2002 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். முன்னாள் அதிபர் மறைவினையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் தனது இரங்கல் செய்தியில், சிறந்த மனித நேயம் மிக்க தலைவரையும், நண்பரையும் இழந்து விட்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rpalni
டிச 30, 2024 11:12

உலகம் சமாதானம் அது இது என்று பேசி, சோவியத் யூனியனை வாழ வைத்தவர். அமெரிக்கா மறுபடியும் ரேகன் வந்த பிறகு நிமிர்ந்தது. ரொம்ப வீக் ஆன ஜனாதிபதி. ரிப் அங்கு கடற்கரை ஏதுமிருந்தால் அவருடைய தொப்பிக்கு சிலை வைக்கலாம்


N.Purushothaman
டிச 30, 2024 09:33

ஆழ்ந்த இரங்கல்கள்.....ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள்...


Kasimani Baskaran
டிச 30, 2024 08:35

ஆழ்ந்த இரங்கல்கள்


RAMAKRISHNAN NATESAN
டிச 30, 2024 08:29

தில்லிக்கு அருகிலுள்ள ஒரு ஹரியாணாவைச் சேர்ந்த கிராமம் .... அதன் பெயர் கார்ட்டர்புரி ... இவரது நினைவாக அப்பெயர் பெற்றது .....


Subramanian
டிச 30, 2024 08:15

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


கிஜன்
டிச 30, 2024 08:12

நிக்சன் காலத்தில் இருந்த சரியில்லாத உறவை மேம்படுத்தியவர்கள் .... ஜிம்மி கார்ட்டரும் .... மொரார்ஜி தேசாயும் .... அப்போது விளங்காத சோவியத் யூனியன் படு ஸ்ட்ராங்காக இருந்தது ..... கார்ட்டர் நேரடியாக புதுடில்லிக்கு வந்து ...பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்து ..... இந்தியாவின் ஜனநாயக வலிமையை எடுத்துரைத்தார் ..... இன்றய உறவுக்கு அடித்தளமிட்டது ....அந்த வருகை .... போய் வாருங்கள் ஜிம்மி கார்ட்டர் அவர்களே .... உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி ....


RAMAKRISHNAN NATESAN
டிச 30, 2024 08:30

போய்வருவது... அதாவது மறுபிறப்பில் இஸ்லாத்துக்கு நம்பிக்கை உள்ளதா ?


ramesh
டிச 30, 2024 10:54

அப்போது நமக்கு ரஷ்யா தான் உண்மையான நண்பனாக இருந்தது .அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நட்புநாடாக உதவி செய்தது. ரஷ்யா, இந்தியா நடத்திய போர்களில் ஆயுதங்களை கடனாக கொடுத்து உதவியது. பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து வந்தது. என்றுமே நமக்கு ரஷ்யா உற்ற நண்பனாகவே இருக்கிறது


Oru Indiyan
டிச 30, 2024 08:11

அதென்ன.. டிசம்பரில் பல பெருந்தலைகள் காலமாகிறார்கள் ...


Rpalni
டிச 30, 2024 12:11

இலையுதிர் காலமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை