உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூப்பர் மேன் முதல் காமிக்ஸ் புத்தகம்: அமெரிக்காவில் ரூ.81 கோடிக்கு ஏலம்

சூப்பர் மேன் முதல் காமிக்ஸ் புத்தகம்: அமெரிக்காவில் ரூ.81 கோடிக்கு ஏலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க் : அமெரிக்காவில், 1939-ம் ஆண்டு வெளியான, 'சூப்பர்மேன் எண் 1' என்ற காமிக்ஸ் புத்தகத்தின் ஒரே ஒரு அரிய பிரதி, 81 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள், கடந்த ஆண்டு இறந்த தங்கள் தாயின் பழைய வீட்டை விற்க முடிவு செய்தனர். இதற்காக வீட்டை சுத்தம் செய்தபோது, பரணில் சிலந்தி வலைகளுக்கு நடுவே பழைய செய்தித்தாள்கள்,சில அட்டைப் பெட்டிகள் கிடந்தன. அதைத் திறந்து பார்த்த போது உள்ளே அவர்களின் தாய் சேகரித்து வைத்திருந்த இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய அரிய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. அதில், 1939-ல், 'டிடெக்டிவ் காமிக்ஸ் இன்க்' என்ற பதிப்பகம் வெளியிட்ட, 'சூப்பர்மேன் எண் 1' என்ற காமிக்ஸ் புத்தகமும் இருந்தது.பெட்டியைக் கண்டுபிடித்ததும் மூன்று சகோதரர்களும் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸில் உள்ள, 'ஹெரிடேஜ்' ஏல நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஏல நிறுவனத்தின் காமிக்ஸ் நிபுணர் நேரில் சென்று புத்தகத்தை ஆய்வு செய்தார். பெட்டியில் கிடந்த காமிக்ஸ் புத்தகம், உலகின் முதல் சூப்பர் ஹீரோவுக்கு என தனி இதழாக வந்த முதல் பதிப்பு என்பது தெரிய வந்தது. ஐந்து லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டதில், இன்று உலகம் முழுதும், 500-க்கும் குறைவான பிரதிகள் தான் இருக்கின்றன. அதில் இருந்த ஒரு சிறிய விளம்பரம் மூலம், அது முதல் பதிப்பு என்பது உறுதியானது. புத்தகம் எந்த சேதமும் இல்லாமல், நிறமும் புத்தம் புதிதாக, அப்படியே இருந்தது ஆச்சரியப்பட வைத்தது. இந்த புத்தகம், உலகில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட காமிக்ஸ் புத்தகம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.இந்த அரிய காமிக்ஸ் புத்தகம், 81 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், சூப்பர்மேன் கதாபாத்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய, 'ஆக்ஷன் காமிக்ஸ் எண் 1' என்ற புத்தகம், 52 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது உலக சாதனையாக கருதப்பட்டது. அதை இந்த புத்தகம் முறியடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை