உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 190 சடலங்களை எரிக்காமல் போலி அஸ்தி கொடுத்து மோசடி

190 சடலங்களை எரிக்காமல் போலி அஸ்தி கொடுத்து மோசடி

டென்வர்: அமெரிக்காவில் 190 சடலங்களை பதுக்கி வைத்து, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொலராடோ மாகாணத்தில் பென்ரோசில் பகுதியில், இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வருபவர் ஜான் ஹால்போர்ட். அவருக்கு சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கடந்த 2023ல் புகார் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, 190 உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கொரோனா காலத்தின்போது, 2019 முதல் 2023 வரை, ஹால்போர்ட் மற்றும் அவருடைய மனைவி கேரி, உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு உடல்களை எரிக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதைத் தவிர, கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக, அரசிடம் இருந்து, 8 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.இந்த தம்பதி, உடல்களை எரித்ததாகக் கூறி உறவினர்களிடம் போலி அஸ்தியை வழங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜான் ஹால்போர்டுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.இதைத் தவிர, சடலங்களை குவித்து வைத்தது தொடர்பாக மற்றொரு வழக்கு, தனியாக விசாரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பெரிய ராசு
ஜூன் 29, 2025 11:24

விசாரிச்சு பாருங்க எவனாவது தீ முக காரன் பின்னாடி இருப்பான்


மோகன சுந்தரம்
ஜூன் 29, 2025 08:26

திராவிட மாடல் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது வாழ்க வளமுடன்.


Kasimani Baskaran
ஜூன் 29, 2025 08:02

காட்டுமிராண்டித்தனமாக உள்ளது. நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருந்தது என்றுதான் தெரியவில்லை.


Sudha
ஜூன் 29, 2025 07:50

இதை தலைப்பு செய்தியாக கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்.


Sudha
ஜூன் 29, 2025 07:49

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்


Kalyanaraman
ஜூன் 29, 2025 07:46

190 கொரோனா சடலங்கள் கடந்த மூன்று வருடங்களாக அழுகிய நிலையில் இருந்தாலும் கொரோனா அந்த பகுதியில் யாருக்கும் பரவவில்லை. கொரோனாவால் பீடிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலத்தை தொடுவது கூட பேராபத்து என்று பயமுறுத்திய உலகம் இந்த சம்பவத்தின் மூலம் அது வெறும் புரளியோ என்று நினைக்கும்படி உள்ளது.


visu
ஜூன் 29, 2025 10:34

இறந்தவர்களிடம் இருந்து கொரானா பரவாது என்று உச்சத்திலேயே தெரிவித்து விட்டனர்


N Sasikumar Yadhav
ஜூன் 29, 2025 07:36

திமுகவின் கிளையை அமெரிக்காவில் வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள் விரைவில் ஆட்சியை பிடிக்க வாழ்த்துவோம்


pmsamy
ஜூன் 29, 2025 06:40

பிணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை