உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைன் எதிர்காலத்தை தீர்மானிப்பதா:பிரான்ஸ் அதிபர் எதிர்ப்பு

உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைன் எதிர்காலத்தை தீர்மானிப்பதா:பிரான்ஸ் அதிபர் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது'', என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக வரும் 15 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், ரஷ்ய அதிபர் புடினும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது தொடரபான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைக்கப்படவில்லை. தாங்கள் நேரடியாக பேசினால் தான் இந்தபோர் முடிவுக்கு வரும் என உக்ரைன் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஜெர்மன் அதிபர் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் பேசினேன். உக்ரைனை ஆதரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஒற்றுமை உணர்வோடு செயல்படுகிறோம். உக்ரைனியர்கள் இல்லாமல் உக்ரைனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது. அவர்கள், 3 ஆண்டுகளாக சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்காக போராடுகின்றனர். தங்களின் பாதுகாப்பு தொடர்பானதால், உக்ரைனின் தீர்வில் ஐரோப்பியர்களும் ஒரு பகுதியாக இருப்பார்கள். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், ஐரோப்பிய கூட்டாளிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மேக்ரான் கூறியுள்ளார்.

இந்தியா வரவேற்பு

அமெரிக்கா - ரஷ்யா அதிபர்கள் வரும் 15ம் தேதி அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அலாஸ்காவில் வரும் 15ம் தேதி அமெரிக்கா ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா வரவேற்கிறது. இந்த சந்திப்பானது, உக்ரைனில் தற்போது நடக்கும் மோதலை முடிவுக்கு வருவதுடன், அமைதிக்கான வாய்ப்புகளைத் திறப்பதற்கும் வாக்குறுதியை கொண்டுள்ளது. இது போருக்கான காலம் இல்லை என பிரதமர் மோடி பல முறை தெரிவித்துள்ளார். எனவே இந்த சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. இந்த முயற்சிகளுக்கு ஆதரவை தருகிறது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ