உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நோபல் பரிசு வேண்டுமா அமெரிக்க அதிபருக்கு பிரான்ஸ் அதிபர் யோசனை

நோபல் பரிசு வேண்டுமா அமெரிக்க அதிபருக்கு பிரான்ஸ் அதிபர் யோசனை

பாரிஸ்: ஏழு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக தனக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கிண்டல் செய்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் உட்பட ஏழு போர்களை ஏழு மாதங்களில் நிறுத்தியுள்ளதால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என , அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இது குறித்து ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைதியையும், அதற்கான நோபல் பரிசையும் விரும்புபவர். உண்மையிலேயே டிரம்ப் நோபல் பரிசை விரும்பினால், காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒரு தீர்வை நோக்கிப் பாடுபட வேண்டும். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு அழுத்தம் தந்து, காசா போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்பிற்கு அதிகாரம் இருக்கிறது. இஸ்ரேல், -காசா போரையும் நிறுத்தினால், அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ