வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவன் மற்றும் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற இந்திய வங்கி மோசடிக்காரர்களை நாடு கடத்துவதற்கு முன்பு, அவர்களே அவர்கள் இருக்கும் நாட்டிலேயே இயற்கை மரணம் அடைந்துவிடுவார்க. கேஸ் கிளோஸ். இன்று பல வழக்குகள் இந்தியாவில் இப்படித்தான் முடிவுக்கு வருகின்றன. வழக்குகள் தாமதம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. வெட்கம். வேதனை.
இவரை இந்தியாவிற்கு கொண்டுவந்து சொத்துக்களை முடக்கி பெயிலில் விடுவது நல்லது. ரத்த புற்றுநோயுள்ளவரை ஜெயிலில் அடைப்பது மனிதாபிமானம் அற்ற செயல்.
ஆமால்லே? அதுக்கு முன்னாடி இதையும் படி. ஜி. என். சாய் பாபா G. N. Saibaba ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் மற்றும் 90% உடல் ஊனமுற்றவர் சக்கர நாற்காலியில் இருப்பவர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பொய்வழக்கு போட்டு, 2014 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள், அவரது ஊனத்தைப் பற்றி பேசாமலும், அவரது அரசியல் எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டதாக வாதிட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக தொடரப்பட்ட சட்ட நடவடிக்கைகள் செல்லாது எனக் கூறி, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை அவரை விடுதலை செய்தது. இருப்பினும், இந்த விடுதலையை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த சட்ட நடவடிக்கைகளால், சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த சாய் பாபா, கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் காலமானார். இவர் மட்டுமின்றி இன்னும் பல வழக்குகளை உதாரணம் காட்ட முடியும்.