உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கை நழுவியது தங்கம்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

கை நழுவியது தங்கம்: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: ஒலிம்பிக் தடகளத்தில், ஈட்டி எறிதல் போட்டி பைனலில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீ தூரம் ஈட்டி எறிந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். பாகிஸ்தானுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நேற்று ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று முடிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் பைனலுக்கு முன்னேறினர். தகுதிசுற்றில் நீரஜ் முதலிடம் பிடித்ததால், அவருக்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=unfgsqho&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பைனலில் நீரஜ் சோப்ரா, தனது 2வது முயற்சியில், அதிகபட்சமாக 89.45 மீ தூரம் ஈட்டி எறிந்தார். அதேசமயம் பாகிஸ்தானின் நதீம், 92.97 மீ., தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனை படைத்தார். தவிர தனது கடைசி முயற்சியிலும், அவர் 90 மீ.,க்கும் அதிகமாக வீசி அசத்தினார்.முடிவில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு தங்கமும், நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளியும், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (88.54 மீ) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் வெள்ளிப் பதக்கம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ES
ஆக 09, 2024 16:21

Incredible performance to win medals in back to back Olympics. Hopefully he gets gold again next


S. Narayanan
ஆக 09, 2024 13:26

அடுத்தவர்கள் முன்னேற உதவி செய்வது தங்கத்தின் மதிப்பை விட உயர்ந்தது. ஹாட்ஸ் ஆப் டூ யு நீரஜ்.


Swaminathan L
ஆக 09, 2024 11:41

எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும் இன்னமும் சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பும், முயற்சியும் வேண்டும். நம் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானோர் சுமாரான திறன், திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆரம்பப் போட்டியிலேயே வெளியேறுகிறார்கள். அல்லது, நல்ல திறன், திறமை இருந்தாலும் போட்டி என்கிறபோது எழும்பும் படபடப்பு, மன அழுத்தம் காரணமாக முக்கியமான தருணங்களில் கோட்டை விட்டு காலிறுதி, அரையிறுதியில் கிடைத்த பதக்கம் போதும் என்று வெளியேறுகிறார்கள். ஏதாவது ஒரு சிறந்த சாம்பியன் உருவானால் அது ஒரு முறை தங்கம் அல்லது வெள்ளியை வாங்கி நாடே மெச்சிக் கொண்டாடி பணமும், அங்கீகாரமும், புகழும் கிடைத்த பின் சிகரத்தில் நிற்கும் திருப்தியும், இனிமேல் சாதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவமும் வந்து விடுகிறது. போதாக்குறைக்கு, வர்ணனை செய்பவர்கள், செய்தியாளர்கள் என்று பலரும் விளையாட்டு வீரர்களின் பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் பதக்கம், பதக்கம் என்று பிராணனை எடுககிறார்கள். இந்த முறையும் மலையை உடைத்து மடுவை நிரப்பிய கதை தான்.


Svs Yaadum oore
ஆக 09, 2024 07:34

பதக்கம் வாங்கும் அனைவரும் வடக்கன் மாநிலங்களாக உள்ளது. ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் சமூக நீதி ஜாதி வாரி இட ஒதுக்கீடு சரியாக செயல்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது ... விடியல் திராவிடர்கள் மத சார்பின்மையாக இந்த அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் ....மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் திராவிட அக்கா தலைமையில் நடத்தினால் ஆரிய வடக்கு பிற்போக்குவாதிகளுக்கு தகுந்த பாடம் கிடைக்கும் ..


Kasimani Baskaran
ஆக 09, 2024 07:14

பாராட்டுகள்.


naranam
ஆக 09, 2024 04:48

பல நாடுகளில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு தங்கள் கட்டுப்பாட்டில் அடிமைப் படுத்தி சூறையாடி மக்களையும் கொன்று குவித்த பாவத்தின் பலனை பிரிட்டன் இன்று அனுபவிக்கிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை