உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்பு: டிரம்ப்

உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வர வாய்ப்பு: டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். சவுதி அரேபியாவில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. இதனை ரஷ்யாவும் ஏற்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார். இதனை ஆதரிப்பதாக ரஷ்ய அதிபர் புடினும் கூறினார்.இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று, புடினுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.இதனைத் தொடர்ந்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று புடினுடன் ஆக்கப்பூர்வமான வகையில் சிறந்த ஆலோசனை நடந்தது. இதன் மூலம், இந்த கொடூரமான, ரத்தக்கறை மிகுந்த போர் இறுதியில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான உக்ரைன் படை வீரர்களை, ரஷ்ய ராணுவம் சூழ்ந்துள்ளது. அவர்கள் மிகவும் மோசமாக மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர். அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுமாறு புடினைக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் கொல்லப்பட்டால், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஒரு கொடூரமான படுகொலையாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Appa V
மார் 14, 2025 22:51

புட்டினுக்கு ஆங்கிலம் தெரியாது டிரம்புக்கு ரஷ்ய மொழி தெரியாது ..டெலிபோனில் அப்படி என்ன மாட்லாடினார்களோ ?


Ramesh Sargam
மார் 14, 2025 21:55

ஒருவேளை போர் முடிவுக்கு வந்தால், டிரம்ப் நோபல் அமைதி பரிசு அவருக்கே கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்.


R Dhasarathan
மார் 14, 2025 20:13

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதுச்சாம், இதற்கு தான் அந்த கோமாளி ஓடி சரணடைந்தார் போல


Srinivasan Krishnamoorthy
மார் 14, 2025 20:59

us was funding war unnecessarily, zelensky was making money as well Biden thru war funding. now trump stopped every thing. now the deep state will keep quiet. trump has not initiated any war during his term.so he is right


சமீபத்திய செய்தி