உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் நல்லுறவு; சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் நல்லுறவு; சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பார்லிமென்டில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது: யூத எதிர்ப்பு அலை இருந்தபோதிலும், பல நாடுகள் மற்றும் தலைவர்களிடமிருந்து முன் எப்போதும் இல்லாத ஆதரவு நமக்கு கிடைக்கிறது. பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. இஸ்ரேல் இன்று எப்போதையும் விட வலிமையானது.பல உலகத் தலைவர்கள் எங்களைத் தேடி வருகின்றனர். நமது மகத்தான சாதனைகளைப் பார்க்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் போரில் ஈடுபட்ட போதிலும் இஸ்ரேல் ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நான் எனது பழைய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அடிக்கடி பேசுகிறேன். விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதிக மக்கள் தொகையை கொண்ட ஒரு பெரிய நாடு இந்தியா எங்களுடன் உறவை வலுப்படுத்த விரும்புகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு இல்லை. அமெரிக்காவிற்கு இஸ்ரேலை விட சிறந்த நட்பு நாடு இல்லை. உலகம் முழுவதும் யூத விரோதத்தை நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rathna
டிச 09, 2025 17:11

இஸ்ரேல் இந்தியாவை போல தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. தொழில் நுட்பத்தில், ராணுவ ஆராய்ச்சியில் அவர்கள் உலகில் முன்னோடி. அவர்களுடன் நட்புடன் இருப்பது நல்லது.


djivagane
டிச 09, 2025 18:18

இஸ்ரயேல் தீவிரவாதத்தை தூண்டிவிடும் நாடு இந்தியாவோடு ஒப்பிடவேண்டாம்


Skywalker
டிச 09, 2025 13:17

Our country should maintain careful relations with Israel, as that country is highly controversial for its actions, and it might give anti nationals a justification for terrorism


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை