உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ''ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருப்பது நல்ல நடவடிக்கை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தினால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இதை சமாளிக்க தள்ளுபடி விலையில், அந்நாடு கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய நம் நாடு, குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கியது.இது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆக., 1 முதல், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், அபராதம் விதிப்பதாகவும் அறிவித்தார். மேலும், இந்தியா - ரஷ்யா பொருளாதாரம் செத்து போய்விட்டதாகக் கடுமையாக விமர்சித்தார்.தற்போது, விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

மு.செந்தமிழன்
ஆக 02, 2025 20:53

அய்யா சாமி தாங்க முடியலை யாராவது இந்த ஆளை ஒரு நல்ல டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போங்க


Nathan
ஆக 02, 2025 20:15

இந்தியாவை வெறுப்பேற்ற நீங்கள் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பதால் உங்களை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இந்தியா தனது வலிமையை காட்டும். இது உங்களின் ஆணவத்தை அடக்க இந்தியா போன்ற தன்மானம் உள்ள நாடு தற்போது எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை.


Loganathan Kuttuva
ஆக 02, 2025 19:12

ரயில் போக்குவரத்து மின்மயமாக்கப்பட்டுள்ளது டீசல் தேவை இல்லை .மெட்ரோ போக்குவரத்தும் மின் மயமாக்கப்பட்டுள்ளது .


Subash BV
ஆக 02, 2025 18:21

Might be just temporary. DONT TRUMP JUMP INTO CONCLUSIONS. WAIT AND WATCH.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 02, 2025 18:13

என்ன மூரக்ஸ் எரியுதா ? அமீரக நண்பர்கள் கிட்ட ஏற்கனவே பேசி இருக்காங்க ,


spr
ஆக 02, 2025 17:30

தவறான செய்தியோ "Aug 2 Reuters - India will keep purchasing oil from Russia despite U.S. President Donald Trumps threats of penalties, two Indian government sources said, not wishing to be identified due to the sensitivity of the matter. "These are long-term oil contracts," one of the sources said. "It is not so simple to just stop buying - வெள்ளைக்காரன் சொன்னா சரியாத்தான் இருக்கும்


Tamilan
ஆக 02, 2025 17:23

இப்போதும் டிரம்ப்பிடம் சரணாகதி அடையவில்லை என்றுதான் மோடியின் கர்ஜனை இருக்கும்


மனிதன்
ஆக 02, 2025 15:50

முதலாளி சொன்னா கேக்காம இருக்க முடியுமா? அதான் நிறுத்திட்டாரு...


vivek
ஆக 02, 2025 16:46

நீ அங்கே ஒட்டகம் மேய்க்கும் வேலையை மட்டும் பார்க்கலாம்


Anand
ஆக 02, 2025 18:17

நிறுத்தவில்லை என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது, உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைப்பது தான் கேடுகெட்ட மூர்க்கங்களுக்கு முழுநேர வேலை...


ரங்ஸ்
ஆக 02, 2025 14:21

சீக்கிரம் அவரு கேட்ட நோபல் பரிச குடுத்துடுங்க. அப்ப தான் அவரு சாந்தமடைவாரு.


balasubramanian
ஆக 02, 2025 14:18

, ரஷ்யா விடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.


புதிய வீடியோ