உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

அமெரிக்காவில் பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆஸ்டின்; அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த மர்ம நபர், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார்.என்ன நடக்கிறது என்பது புரியாமல் அங்குள்ளோர் ஒருபுறம் அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், பின்னர் அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டு தப்பித்தார். மின்னல் வேகத்தில் காரை இயக்கிய அந்நபர், சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.பின்னர், அங்குள்ள மற்றொரு காரை திருடி எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் யார் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. சம்பவம் குறித்து ஆஸ்டின் நகர மூத்த போலீஸ் அதிகாரி டேவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். இதில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய மர்ம நபரை கைது செய்துள்ளோம். அவர் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோன்றுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.மர்ம நபரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஆஸ்டின் நகர மக்கள் பீதியில் உள்ளனர். இதையடுத்து, நகர மேயர் கிர்க் வாட்சன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது; இது ஒரு கோழைத்தனமான துப்பாக்கிச்சூடு. மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மக்கள் பீதி அடைய வேண்டாம், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி