உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாக்., பயங்கரவாதி உயிரிழப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாக்., பயங்கரவாதி உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாகூர்: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனரும், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி மாரடைப்பால் உயிரிழந்தான். 2008 ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும் இவனுக்கு தொடர்பு உள்ளது.நீரிழிவு பாதிப்பு காரணமாக லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. அதில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவன் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் உத் தாவா அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளான். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கில் இவனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பிறகு இவனின் செயல்பாடுகள் முடங்கின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o9tjy92j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தடை2010 ல் இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, அவனது சொத்துகள் அனைத்தையும் முடக்கியது. அவனுடன் அமெரிக்கர்கள் தொடர்பு கொள்வதையும் தடுத்தது. 2023ம் ஆண்டு இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை, அவனின் ஆயுதங்களை முடக்கியதுடன், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து இருந்தது.ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு2000 டிச.,22 ல் டில்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதல் 2008 ஜன.,1 ல் ராம்பூரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல், 2008 நவ.,26 மும்பை பயங்கரவாத தாக்குதல், 2019 பிப்.,12 -13 ல் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல் 2018 மே 30 ல் பாரமுல்லாவில் நடந்த தாக்குதல்2018 ஆக., 7 ல் பந்திப்போராவில் நடந்த தாக்குதல் சம்பவங்களிலும் தொடர்பு உள்ளது. 2006 மே 7 ல் ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை இவன் கண்காணித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

veeramani
ஜன 01, 2025 11:20

அயோக்யன் செத்ததையெல்லாம் நியூஸ் ஆக்கவேண்டாம் . இவனை இந்திய மக்கள் மன்னிக்கவே மாட்டோம். இவன் இந்தியாவில் பிடிபட்டிருப்பேனாகில் அவனுக்கு மக்களே தெருவில் துக்கு தண்டனை அளித்திருப்பார்கள். இவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனையும் சும்மாவிடமாட்டோம்


பேஜார்
டிச 28, 2024 08:30

வீர வணக்கம் இன்னும் சொல்லலியே. தகவல் வரவில்லையா?


Rpalni
டிச 28, 2024 04:23

சீமான் பெரியப்பா சவ ஊர்வலத்துக்கு போவாரா?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 27, 2024 18:38

இந்தியாவில் இவனுக்காக ஐந்தாம்படை இல்லாமே இதெல்லாம் இவனால் செய்ய முடியுமா ????


Sudha
டிச 27, 2024 18:08

பார்ரா, இவ்ளோவேலை செஞ்சும் நாம கண்டுக்கவே இல்லை, அதனால மனசு ஒடஞ்சு செத்து போய்ட்டான்


Mohan
டிச 27, 2024 17:58

திராவிட விடியலின்பங்காளிகள், கோவையில் தைரியமாக சவ ஊர்வலம் நடத்தியவர்களுக்கு கனிமொழி ராசா,பாலு விசா பெற்றுத்தந்து அமைதி மார்க்கத்தவருக்கு உதவலாமே. சகிப்புத் தன்மை இல்லாத அமைதி மார்க்கத்தவருக்கு திராவிட விடியல் போராளிகள் சற்று மதச்சார்பின்மை பற்றி எடுத்துரைத்து தங்கள் கொள்கைகளைப் பரப்பலாம். குண்டுகளை உடலில் தாங்கி தங்களது கொள்கைப்பிடிப்பை உலகுக்கு நிரூபிக்கலாம். சிறந்த வாய்ப்பு.


Nethiadi
டிச 27, 2024 17:32

எப்படி குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் கைதாகி வெளிய வந்த ஹிந்து தீவிரவாதி ஆதரவாக சங்கிகீகள் எல்லாம் பன்னனுகளே அதே போல வா?


Yaro Oruvan
டிச 27, 2024 18:20

கெளம்பி போயி அவிகளுக்கு ஒதவி செய்ங்கப்பா.. இங்கன நாத்தம் குறையும்


Jagannathan Narayanan
டிச 27, 2024 19:40

ஓவர் முட்டு


A Viswanathan
டிச 27, 2024 16:45

இங்கிருந்து யாரும் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு போகவில்லையா.


புதிய வீடியோ