உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயார்!

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: '' இஸ்ரேலுடன் போரை நிறுத்துவது தொடர்பான திட்டத்துக்கு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளோம்,'' என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 நாட்கள் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் ஆலோசிக்கப்பட்ட வந்த நிலையில், அதற்கு நேர்மறையான பதிலை மத்தியஸ்தர்களிடம் கொடுத்துள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறை றித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

naranam
ஜூலை 06, 2025 09:55

ஹமாசுக்கு வேறு வழியிருக்கிறதா? அடி உதவுவது போல்...ஆனால் இடையில் சிக்கிக் அப்பாவி பாலஸ்தீன மக்கள் தான் பாவம்.. ஹமாஸில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டாலும் நல்லது தான்.


சிட்டுக்குருவி
ஜூலை 05, 2025 20:23

இஸ்ரயேலின் கிழக்கு எல்லையில் பாலஸ்தீனத்தோடு ஒட்டி மாற்று நிலம் வழங்கி புனரமைப்புகளை ஏற்படுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தலாம் .


JAINUTHEEN M.
ஜூலை 05, 2025 20:14

உலகின் மிக மோசமான நாசகார பயங்கரவாதி இஸ்ரேல் மட்டுமே.


சிட்டுக்குருவி
ஜூலை 05, 2025 20:13

வரவேற்கத்தக்க நல்ல முடிவுதான்.எந்த நாடும் போரின்மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணமுடியாது என்ற தீர்க்கமான முடிவை உலகுக்கு பறைசாற்றி அதை பின்பற்றிவருவதும் பாரத பிரதமரின் சிறப்பு அம்சம் .


தியாகு
ஜூலை 05, 2025 19:28

உலகின் கடைசி மூர்க்கன் இருக்கும் வரையில் உலகில் அமைதி இருக்காது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 05, 2025 20:22

அதெப்படியா....இங்க கடைசி மூர்க்கன் இருக்கும் வரை அமைதியில்லைன்னு ஒரு சிக்சர் அங்கே உதய்ணா விளையாட்டு துறை மந்திரியாக இருப்பதால் தான் வைபவ் அதிக வேக சதமடித்தார்னு ஒரு சிக்சர்.... இப்படியே சிக்சர் மழையா பொழியுங்க தியாகு....!!!


Anand
ஜூலை 05, 2025 18:45

இவனுங்க இன்னுமா இருக்கானுங்க?


A viswanathan
ஜூலை 05, 2025 19:50

எப்படியோ சண்டை நிறுத்தி சமாதானமாக போங்கள்.


புதிய வீடியோ