உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் தடை: கோர்ட் படியேறிய ஹார்வார்டு பல்கலை.

வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் தடை: கோர்ட் படியேறிய ஹார்வார்டு பல்கலை.

வாஷிங்டன்; சர்வதேச மாணவர்களை சேர்க்கும் உரிமையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக பாஸ்டன் கோர்ட்டில் ஹார்வார்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனம் ஹார்வார்டு பல்கலைக் கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் அதிபராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப், இந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் உரிமையை ரத்து செய்து உத்தரவிட்டார்.டிரம்ப்பின் புதிய உத்தரவால் ஹார்வார்டில் தற்போது பயின்று வரும் 6800 வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது. இவர்களில் இந்திய மாணவர்கள் 788 பேரும் அடக்கம். புதிய உத்தரவை கண்டு அதிர்ச்சியான ஹார்வார்டு பல்கலைக்கழகம், டிரம்ப்பின் முடிவு அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி அப்பட்டமான மீறல், சட்ட விரோதமானது என்று கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ள பாஸ்டன் நீதிமன்றத்தில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு ஒன்றையும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் தொடர்ந்துள்ளது. ஒரேயொரு பேனா வழியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் பல்கலைக்கழகத்தின் நோக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் 25 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள் பேரழிவை சந்திப்பர் என்று கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 23, 2025 20:45

ட்ரம்ப் கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்து மருத்துவம் பார்த்துக்கொள்வது அவருக்கு நல்லது. அமெரிக்க நாட்டிற்கும் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை