உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இவரு தான் எங்களுக்கு வேணும்...! நோபல் பரிசு பெற்றவரை அழைக்கும் வங்கதேச மாணவர்கள்!

இவரு தான் எங்களுக்கு வேணும்...! நோபல் பரிசு பெற்றவரை அழைக்கும் வங்கதேச மாணவர்கள்!

டாக்கா: வங்கதேச எழுத்தாளரும், நோபல் அமைதிப்பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று வங்கதேச மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், ராணுவம் தலையிட வேறு வழியின்றி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து தப்பி, இந்தியா வந்துள்ளார்.

நோபல் பரிசு எழுத்தாளர்

அந்நாட்டின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுவிட, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றிய பல்வேறு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. இந் நிலையில், நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளரும், கிராமிய வங்கி தொடங்கியவருமான முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

அரசுக்கு தலைமை

வங்கதேசத்தில் ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் எழுத்தாளர் முகமது யூனுஸ்(84). அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். வங்கதேச நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை இவரே அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று மாணவர் இயக்க பிரதிநிதிகள் நஹித் இஸ்லாம், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜூம்தார் வீடியோ ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தகவல்கள்

நாட்டில் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஷேக் ஹசீனா , தமது பிரதமர் பதவியில் இருந்து விலகும் முன்பு அந்நாட்டில் நடந்த அரசியல் சூழல்கள், காய் நகர்த்தல்கள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு; வங்கதேச மாணவர்கள் இயக்கங்களின் போராட்டம் கலவரம், தீ வைப்பு, உயிர்பலி என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வலுவாக நகர ஆரம்பிக்க, ஹசீனாவுக்கு நெருக்கடி முற்றியது. தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களிடம் விளக்க வேண்டும் என்று ஹசீனா விரும்பி இருக்கிறார்.

இரு அணிகள்

அதற்கு ஏற்ப நாட்டைவிட்டு வெளியேறும் முன்பாக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் ராணுவ வட்டாரத்தில் ஹசீனாவுக்கு எதிராக மற்றும் ஆதரவாக இரு அணிகள் இருந்துள்ளது. குறிப்பாக, இளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 60 பேர் அவரின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு கவுன்சில்

எதிர்ப்பு அணியினர் ஹசீனாவின் முடிவை ஒப்புக் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. மாணவர்கள் போராட்டத்தின் போது அவர்களை தடுத்து நிறுத்த மாட்டோம் என்று ஹசீனாவிடம் ஞாயிறன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. திங்கள்கிழமை காலை 9 மணி வரை நிலைமை கட்டுக்குள் இருந்த நிலையில், அதன் பின்னர் காசிப்பூர் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் டாக்கா நோக்கி முன்னேற ஆரம்பித்தனர்.

45 நிமிடங்கள்

போராட்டக்காரர்களை ராணுவம் கட்டுப்படுத்தாமல் இருந்ததால் நிலைமை தலைகீழாக மாறிவிட, அவரின் தொலைக்காட்சி உரை என்ற முயற்சியும், திட்டமும் எடுபடாமல் போனது. 45 நிமிடங்களில் நாட்டைவிட்டே வெளியேறி விட வேண்டும் என்று ராணுவமும் கடும் நெருக்கடியை முன் வைக்க என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து இருந்திருக்கிறார்.

இடைக்கால ஆட்சி

வேறு வழியின்றி உடனடியாக அவர், தமது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதன் பின்னரே ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு, இடைக்கால ஆட்சிக்கான அறிவிப்பும் வெளியானது. அடுத்து என்ன நடக்கும் என்பது உறுதியாக கணிக்க முடியாத நிலையில் வங்கதேசத்தின் அரசியல் நிலைமைகளை உலகின் மற்ற நாடுகள் உன்னிப்பாக உற்றுப்பார்க்க ஆரம்பித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

ஆரூர் ரங்
ஆக 06, 2024 16:15

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?


N Srinivasan
ஆக 06, 2024 15:25

அடுத்த தேர்தலிலும் மம்தா கண்டிப்பாக வெற்றிதான் CAA எல்லாம் தூக்கி ஓரமா போடுங்க


Yaro Oruvan
ஆக 06, 2024 13:28

மூர்க்கர்களுக்கு இது புதிதல்ல மதம் மதம் அதுக்கு வெறும் ரொட்டியைக்கூட தின்னுகிட்டே கூப்பாடு போட்டு போராடுவானுவ.. பக்கத்து வீட்டுக்கு அவனுவ அவனுவலாவே தீ வச்சிகிட்டானுவ .. நம்மால தீய அணைக்க முடியாது.. நம்ம வீட்டு எல்லைல பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தி தீயின் பாதிப்பு நமக்கு வராம பாத்துக்கிடனும் .. அவனுவ அவனுவலாவே அடிச்சிக்கிட்டு சாவானுவ.. மூர்க்கம் மூர்க்கமானது


Ramakrishnan Sathyanarayanan
ஆக 06, 2024 13:24

வன்முறை பலம் இருப்பவர்கள் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை


sridhar
ஆக 06, 2024 13:20

வயது ரொம்ப ஆயிடுச்சு , இப்போ இவருக்கு நோ பல் .


Kanns
ஆக 06, 2024 11:56

Not Only Bangladesh is Doomed But its Instigator Islamic Fundamentalists are Danger to World/People And Must be Crushed by UN etc Without Mercy


kantharvan
ஆக 06, 2024 13:53

உண்மையில் உங்கள் கவலை உங்களுக்கு நியாயமானது ..அதிகாரம் கொண்டு அடக்கியாளும் அத்தனை துன்மூர்க்கர்களுக்கும் இது கெட்ட சேதிதான் ....Must be Crushed by UN etc தம்பி அந்த UN உம் இப்போ கலக்கத்தில்தான் இருக்கிறது உங்களை போலவே ...இருளில் இருந்து ஒளி ...அடக்குமுறையில் இருந்து சுதந்திரம் ...இஸ்லாமிய மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள். அதிகார போதையில் இருக்கும் நீங்கள் விழித்து கொள்ளுங்கள் .


ஆரூர் ரங்
ஆக 06, 2024 11:23

சிங்களவருக்கு இடஒதுக்கீடு முன்னுரிமை (STANDARDISATION) அளித்ததால் இலங்கையில் தமிழ்த் தீவீரவாதம் துவங்கியது. விடுதலைப் போராட்ட தியாகிகள் என்ற பெயரில் ஆளும் கட்சியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப் போய் வங்கதேசம் அழிந்தது. அதே போல சாதிவாரி கணக்கெடுப்பு சாதி அடிப்படையில் அளவுக்கு மீறிய இடஒதுக்கீடு கோரிக்கைகள் மூலம் நம் நாட்டையும் நாசமாக்க புள்ளிராஜாக் கூட்டணி முயல்கிறது. இவர்களை இரக்கமே காட்டாமல் ஒடுக்குவதால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும்.


silambarasan
ஆக 06, 2024 14:12

இலங்கையிலும் சரி வங்காளதேசத்திலும் சரி குறிப்பிட்ட சமூகம் தனக்கான உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நாளிலேயே போராட்டம் வெடித்துள்ளது. தாங்கள் சொல்வது போல் இங்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதால் எப்படி போராட்டம் வெடிக்கும்


Muralidharan raghavan
ஆக 06, 2024 11:18

பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊக்குவித்து மற்ற நாடுகளுக்கு தலைவலியை கொடுத்து, தானும் அழிந்து பொருளாதார சீர்கேட்டை சந்தித்து வருகிறது. அதற்கு மாறாக வங்கதேசம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணித்து ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இப்போது மாணவர்களின் போர்வையில் தீவிரவாதிகள்தான் தற்போதைய கலவரத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன் . இந்த நாடும் தீவிரவாதிகளின் கைப்பாவையாக மாறிவிட்டால், நமக்கு தலைவலிதான். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் பெரும்பகுதியினர் ஊடுருவி உள்ள நிலையில் நிலைமை இனியும் மோசமடையும். இந்தியாவுக்கு பெரும் சவால்


Kumar Kumzi
ஆக 06, 2024 10:56

பங்களாதேஷ் மீண்டும் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு சென்று விட்டது மூர்க்கம் அழிவு பாதையில் செல்கிறது இந்தியாவுக்குள் வர முயற்சிக்கும் மூர்க்கர்களை சுட்டு கொல்லணும்


தமிழ்வேள்
ஆக 06, 2024 10:55

யூனுஸ் கல்வியாளராக இருக்கலாம் . ஆனால் அரசியல் என்று வரும்போது, மத அடிப்படைவாத குழுக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகம் ..இவரையும் காபிர்களின் அடிவருடி என்று சொல்லி சிறையிட ஏற்பாடு செய்யும் மூர்க்க கும்பல் ...


மேலும் செய்திகள்