உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி., யில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு!

ஆஸி., யில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.22.41 கோடி) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, 43, என தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார். அஹமதுவை ஆஸ்திரேலியாவின் ஹீரோ என பாராட்டி இருந்தார். துப்பாக்கிச் சூட்டை சமாளித்து பல உயிர்களைக் காப்பாற்றிய அஹமதுவுக்கு சமூக நன்கொடைகளாக 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.22.41 கோடி) அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் அஹமது, தனது மருத்துவமனை படுக்கையிலிருந்தே காசோலையைப் பெற்றார்.உயிர்களைக் காப்பாற்ற அவரது துணிச்சலுக்காக அவர் பாராட்டப்படுகிறார். இரண்டு குழந்தைகளின் தந்தையான அவருக்கு சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
டிச 19, 2025 19:54

A real hero and not a reel hero. Hats off man.


Skywalker
டிச 19, 2025 18:13

Congratulations he deserves that reward, true hero


V Venkatachalam, Chennai-87
டிச 19, 2025 18:08

எல்லாரும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய போது இவர் ஆயுதம் ஏதுமின்றி தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செய்த இந்த செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர் ஒரு வீர புருஷர். இவருக்கு வழங்கும் எல்லா சன்மானங்களையும் பெற முழு தகுதி படைத்தவர். இவரை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.


தமிழன் மணி
டிச 19, 2025 17:46

டேய் இசக்கி....... இது உழைப்பாடா அறிவு கெட்ட மடையா? இவர் செய்தது தியாகம் தன் உயிரை தூச்சமாக மதித்து செய்த மிக பெரிய வீர செயல் வாழ்த்துக்கள் நண்பா விரைவில் பூரண நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா அரசு இவருக்கு ஏதாவது உயர்ந்த விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்


V Venkatachalam, Chennai-87
டிச 19, 2025 18:12

இசக்கிக்கு சூடு போட்டதற்கு வாழ்த்துகிறோம். திருட்டு திராவிடனுங்க பேசுறதுக்கும் இந்த மங்குணி பேசுறதுக்கும் வித்தியாசமில்லை.


Suresh
டிச 19, 2025 17:39

இஸ்ரேல், இந்தியா போல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த துப்பில்லை. நிவாரணம் மட்டும் தருகின்றனர். வெற்று தம்பட்டம்.


இசக்கி
டிச 19, 2025 17:26

உழைப்புக்கு கிடைத்த பரிசு


HoneyBee
டிச 19, 2025 20:47

திராவிட மாடல் அடிமை உனக்கு ₹200 தான் உழைப்புக்கு ஊதியம்


Nachiar
டிச 19, 2025 17:25

இவர்க்கு முன் பயங்கரவாதி வாகனத்தில் இருந்து துப்பாக்கியுடன் ஈரான்கம் பொழுதை அவனை தடுக்கச் சென்ற ஒரு யுத்த வயோதிகரும் அவரது கணவரும் சுடப்பட்டு இறந்தனர். அந்த முதியவர் அவனின் துப்பாக்கியை பறித்தவுடன் அவன் இனொரு துப்பாக்கியை வாஹனத்தில் இருந்து எடுத்து சுட்டான்.அவர்களையும் அரசும் ஊடகங்களும் அந்த ஊர் மக்களும் அங்கீகரித்தால் நன்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை