உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா பலி: இஸ்ரேல் ராணுவம் தகவல்

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா பலி: இஸ்ரேல் ராணுவம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனானில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது பற்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.லெபனானின் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். லெபனானில் தாங்கள் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இது குறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இனி உலகத்தை பயமுறுத்த முடியாது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என குறிப்பிட்டுள்ளது.எனினும் இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நேற்று இரவு நஸ்ரல்லா மறைவிடத்தை தாக்கியதாக, இஸ்ரேல் அறிவித்தபோது, 'அவர் நலமுடன் இருப்பதாக' ஹிஸ்புல்லா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த நஸ்ரல்லா?

* 1992ம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஆக பதவி வகித்தார் நஸ்ரல்லா.* 1.5 லட்சம் ராக்கெட் ஏவுகணை கொண்ட பெரும் ராணுவப்படையின் தலைவர் ஆவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ரெட்டை வாலு ரெங்குடு
செப் 28, 2024 20:39

கொசுத்தொல்லை நா மூ விற்கு ஆழ்த்த அனுதாபங்கள் .அடேடே மறந்துட்டேன் வெலான் வெள்ளரிக்காய் பொய்யனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களப்பு ..ஊரை நாசமாக்கி வாலாட்டுறவன் வாய்வெடிச்சி சாவது நல்லதே.


Minimole P C
செப் 28, 2024 20:20

Good news to all people who do not want terroism.


mei
செப் 28, 2024 19:36

நீ நடத்து கண்ணு


Rajan
செப் 28, 2024 18:58

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். தீவிர வியாதிகள் எங்கு இருந்தாலும் சர்ஜரி தான்னு செய்தால் உள்ளூர், அயல்நாட்டு கொசுக்கள் தொலைந்து போகும்


s sambath kumar
செப் 28, 2024 18:32

இறந்த எல்லா லெபனான் குழைந்தைகளும் ஏஞ்சல் மாதிரி இருக்கு. பாவம். எல்லாம் இந்த பாழாய்ப்போன ஈரானால் வந்த வினை. அவனுக்கும் இஸ்ரயேலுக்கு உள்ள பிரச்னைக்கு லெபனானை பகடைக்காய் மாதிரி ஆக்கிட்டானுங்க. ஏதோ வாட்டர் டாங்க் வைக்கிற மாதிரி ஒவ்வொரு வீட்டிலேயும் ராக்கெட். அப்பறம் இஸ்ரேல் எப்படிங்க சும்மா இருப்பான்? அது அவனை அழிக்கத்தானே? பொது மக்களை எப்பவுமே கேடயமாக்கக்கூடாது.


Duruvesan
செப் 28, 2024 21:36

ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் ஆனால் பூச கூடாது, என்ன மூர்க்ஸ் 1700 பேரை கொன்ன போது இனிச்சது, இப்போ இடிக்குதா? அடுத்து உன்னோட ஹீரோ இரான் தான், அவனை உங்க பங்காளிங்களுக்கே புடிக்காது


ஆரூர் ரங்
செப் 28, 2024 18:13

இந்நேரம் 72 களுடன் ஜாலியா இருப்பான். அது தெரியாமல் நம்ப அமைதிப்படை ஆட்கள்தான் வருத்தத்தில் உள்ளனர்.


பேசும் தமிழன்
செப் 28, 2024 17:36

நல்லது.... இந்த உலகத்தில் இருந்து தேவையில்லாத ஆணி ஒன்றை.... இஸ்ரேல் பிடுங்கி விட்டது.... அவ்வளவு தான்.


Anand
செப் 28, 2024 17:28

கொமேனி ஓடி ஒழிந்துக்கொண்டான், ஆனால் அவன் ஒளிந்திருப்பது எங்கு என இஸ்ரேலுக்கு துல்லியமாக தெரியும், அதாவது கலகலப்பு படத்தில் சந்தானத்தின் அடியாட்கள் ஒளிந்திருப்பது போல.......


Duruvesan
செப் 28, 2024 17:26

Magilchi


N.Purushothaman
செப் 28, 2024 16:48

மக்கள் வசிக்கும் வீடுகளில் ராணுவ தளவாடங்கள் ,ஆயுதங்கள், வெடி மருந்துகள் என வைத்து கொண்டு பூஞ்சாண்டி காட்டின ஹிஸ்புல்லாவை அடிச்சி துவைச்சு துவம்சம் பண்ணிட்டாங்க இஸ்ரேல் ராணுவத்தினர் ...முதலில் மன ரீதியாக பயத்தை காட்டியவர்கள் பேஜர், வாக்கி டால்க்கி தாக்குதல் பின் அதிலிருந்து வெளியே வருவதற்குள் விமான படை மூலம் துல்லிய தாக்குதல் நடத்தி நாசம் பண்ணி விட்டுட்டாங்க ..... அவுங்களை கற்காலத்திற்கு கொண்டு போவோம்ன்னு சொன்னதை நிறைவேத்திட்டாங்க ,,..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை