உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்

ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அவரது ஜாமின் மனு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அச்சுறுத்தல்

இந்த விவகாரத்தில் சின்மோய் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனு, கடந்த மாதம் 26ல் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் போலீசாருக்கும், ஹிந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், சைபுல் இஸ்லாம் அலிப் என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.இதை தொடர்ந்து சின்மோய் தாஸ் ஜாமின் மனு, சாட்டோகிராம் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்மோய் தாசுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததை அடுத்து, விசாரணை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.சின்மோய் தாசுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என்பதற்காக, 70க்கும் மேற்பட்ட ஹிந்து வழக்கறிஞர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே குற்றஞ்சாட்டி உள்ளது.

பாதுகாப்பு இல்லை

இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் கூறியதாவது:சின்மோய் தாசுக்காக ஆஜராக இருந்த வழக்கறிஞர் ராமன் ராய், முஸ்லிம்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வீடு சூறையாடப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் உயிருக்காக போராடி வருகிறார்.வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் துறவிகள் காவி உடை அணிவதையும், நெற்றியில் சந்தனப் பொட்டு வைப்பதையும் தவிர்க்கவும். உங்கள் பக்தி உணர்வை ரகசியமாக வைத்துக் கொள்வதே இப்போதைக்கு உயிருக்கு பாதுகாப்பானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வங்கதேசத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. வங்கதேசத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டதால், அந்நாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு திரிபுரா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொது செயலர் சாய்கத் பந்தோபாத்யாய் நேற்று முன்தினம் அறிவித்தார்.

திரிபுராவில் தடை

போலீஸ் மீது நடவடிக்கை

துறவி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஹிந்து சங்கர்ஷ் சமிதியை சேர்ந்த தன்னார்வலர்கள், திரிபுராவில் உள்ள வங்கதேச துணை துாதரகம் முன், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது, துணை துாதர் அலுவலகத்துக்குள் ஏழு பேர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த மூன்று எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.எஸ்.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, வங்கதேசத்தில் உள்ள இந்திய துாதரகத்தின் துாதர் பிரணய் வர்மாவை, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து, திரிபுராவில் துாதரக அலுவலகத்தில் நடந்த பாதுகாப்பு மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:06

இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில் கோர்ட்டுகள் எப்படி இயங்கும், எப்படி முடிவெடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:05

மும்பையில் கோரத்தாக்குதல் நடத்தி பிடிபட்ட குற்றவாளி அஜ்மல் கசாப் க்கு வழக்கறிஞர் கிடைக்க அவகாசமே கொடுத்தது இந்திய நீதித்துறை ....


Madras Madra
டிச 04, 2024 10:39

பாரதத்தின் ஆற்றல் மிக்க அறிவார்ந்த இனங்களில் ஒன்று வங்கம் இப்படி குட்டிச்சுவராக ஆகி நிற்கிறது தமிழகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்


MUTHU
டிச 04, 2024 09:43

இங்குள்ள பூஷன் வக்கீல் அவனுக்காக, அவனுக்கான தீர்ப்பினை நீர்த்துப்போக செய்ய மிகவும் மெனக்கெட்டார். உச்ச கோர்ட் ஜட்ஜ் அவனுக்காக காலை இரண்டு மணிக்கெல்லாம் தண்டனைக்கு இரண்டு மணி நேரம் முன்பாக அந்த மனுவை விசாரணை செய்தார்.


Pandianpillai Pandi
டிச 04, 2024 09:02

நிலைமை மோசமாக உள்ளது. வாதாட கூட வக்கீல் வரவில்லை யென்றால் அங்கு நீதி கேள்விக்குறியாகி உள்ளது. இந்திய அரசு ஐநா விடம் அழுத்தம் தந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் உலக நாடுகள் பங்களாதேஷுக்கு அழுத்தம் தர வேண்டும். பங்களாதேஷ் பாதுகாப்பு அரணாக இந்தியாவை தவிர வேறு நாடு இருக்க முடியாது என்பதை அந்நாடு உணரவேண்டும்.


Balasubramanian
டிச 04, 2024 06:24

இந்தியாவில் நாம் 26-11-1988 அன்று பாகிஸ்தான் இலிருந்து இந்திய வந்து மும்பையில் 300 க்கும் மேற்பட்ட A.K.47 துப்பாக்கியால் மக்களை சுட்ட பத்து தீவிரவாதிகளில் ஒருவனான கசாப் என்னவனை நீதி மன்றத்தில் நிறுத்தி வழக்கு போட்டு தூக்கில் இட நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டோம்! ஆனால் நம் வீரர்களை காவு கொடுத்து நாம் சுதந்திரம் வாங்கி தந்த பங்களாதேஷ் இல் நம்மவர்களுக்கு அதுவும் கோவிலில் சேவை செய்யும் குரு போன்றவருக்கு வழக்காட ஆள் இல்லை! இந்த லட்சணத்தில் ஊடுருவி நம் நாட்டின் உள்ளே நுழைந்த அந்நாட்டு மகளுக்காக இங்கே அரசியல் செய்பவர்கள் ஏராளம்


Venkatraman Ravishankar
டிச 04, 2024 09:12

மிகவும் சரியாக கூறினீர்கள்


orange தமிழன்
டிச 04, 2024 09:47

உண்மை.....


நிக்கோல்தாம்சன்
டிச 04, 2024 03:20

ஹீ ஹீ இந்த பங்களா முஸ்லிம்கள் பழங்காலத்தில் முஸ்லிம்கள் வந்தேறிகளாய் இந்துவுக்குள் வந்தபோது என்ன பண்ணினார்களோ அதனை மீண்டும் செய்து காட்டுகிறார்கள் , இன்னமும் பெருமபான்மையினர் கண்டும் காணாமல் இருப்பது அவர்களுக்கும் நாளை இது நடக்கும் என்பதனை உணருவது எப்போது


MUTHU
டிச 04, 2024 09:44

என்னைக்கும் உணர மாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை