உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து கோயிலில் தாக்குதல்: பயங்கரவாதியை ஜாமினில் விட்டது கனடா போலீஸ்

ஹிந்து கோயிலில் தாக்குதல்: பயங்கரவாதியை ஜாமினில் விட்டது கனடா போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிராம்ப்டன்: கனடாவில் கடந்த வாரம் ஹிந்துக் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் காலிஸ்தான் பயங்கரவாதியை போலீசார் கைது செய்து நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர்.கனடாவின் பிராம்ப்டன் நகரில் ஹிந்து சபைக்கு சொந்தமான கோயில் உள்ளது. இப்பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தூதரக அதிகாரிகள் வருகை எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது கோயிலில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை தங்களின் கொடியை வைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர்.இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 4 பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவன் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இந்தர்ஜீத் கோசால் என்பவனும் ஒருவன். கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு வேண்டப்பட்டவன் என தெரியவந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 8 ம் தேதி கோசால் கைது செய்யப்பட்டான். ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டான். ஒண்டாரியோ நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அவன் ஆஜர் ஆவான் எனக்கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.V. Iyer
நவ 11, 2024 04:38

ஒரு அரசாங்கமே பயங்கரவாதிகள் ஆளும் அரசாக மாறிவிட்டது, கனடாவில்.


Ramesh Sargam
நவ 10, 2024 20:16

அந்த நாட்டிலும் நமது நாடு போல ஜாமீன் அதிகம் கொட்டிக்கிடக்கிறதுபோல தெரியுது. ஜாமீன் வாங்கலையோ ஜாமீன் என்று கூவி விற்பார்கள் போல தெரிகிறது.


MUTHU
நவ 10, 2024 18:56

அமெரிக்கா இப்படியே ஒவ்வொரு நாட்டிலும் குழப்பம் செய்து கொண்டிருந்தது. செப்டம்பர் 2001 க்கு பின் தனக்கு அடி விழுந்தபின்பு தான் திருந்தியது.


sankaranarayanan
நவ 10, 2024 18:21

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு வேண்டப்பட்டவன் என தெரியவந்துள்ளது என்று கூறுவதே பெரும் தவறு. அந்நாட்டு பிரதமர் ட்ரூடோவைத்தான் கைதுசெய்து சிறையில் தள்ள வேண்டும் தீவிர வாதத்திற்கு இடம் கொடுத்து அதை வளர்ந்துவரும் ஒரே நபர் உலகிலேயே அவர்தான் அங்குள்ள மக்களே அவரை சீக்கிரமாகவே வெளியே தள்ளிவிடுவார்கள்


Oru Indiyan
நவ 10, 2024 14:22

கூடிய விரைவில் கனடா காலிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.


சமீபத்திய செய்தி