உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அதற்குள் 3 பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R. SUKUMAR CHEZHIAN
அக் 09, 2025 15:03

ஊருக்கெல்லாம் வரி போடும் டிரம்ப் துப்பாக்கி விற்றாலும் வாங்கினாலும் 100% வரி என கொண்டு வரமாட்டாரா? யாராவது ஐடியா கொடுத்தால் நல்லது அமெரிக்கா கஜானா ரொம்பி வழியும் பொருளாதார வளச்சியில் இந்தியாவை முந்திவிடலாம். டிரம்புக்கு நோபல் பரிசும் கிடைக்கும்.


Vasan
அக் 09, 2025 10:53

It is high time that USA reviews its policy, and ask all people to surrender their weapons like guns to army, immediately. Gun is the most dangerous weapon.


naranam
அக் 09, 2025 09:29

இது நடக்காமல் இருந்தால் தான் அதிசயம்.. வெளிவந்த செய்திகள் படி தினமும் ஒரு நான்கைந்து பேர்... வெளிவராமல் எத்தனை பேரோ.. பாவம்! சிக் சொசைட்டி!


Field Marshal
அக் 09, 2025 09:18

ஹூஸ்டன் நகரமே அகதிகள் முகாம் மாதிரி தெரிகின்றன ..தெருக்களில் சிக்னல் இருக்கும் இடங்களில் பிச்சை எடுப்பது ..குப்பை போடுவது ..தெருக்களில் உணவு தயாரித்து விற்பனை ...


Ramesh Sargam
அக் 09, 2025 09:52

சகோதரரே, அங்கேயும் அப்படியா? நான் இப்பொழுது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ அருகில் உள்ளேன். இங்கேயும் அதே நிலைதான். நான் இதுவரை நான்கு முறை அமெரிக்காவுக்கு வந்துள்ளேன். இப்பொழுது ஐந்தாவது முறை. ஆனால் இந்தமுறை வீதிகளில் இந்தியாவைப்போல யாசகம் கேட்பவர்கள் அதிகம் உள்ளனர், ஆனால் தொந்தரவு செய்வதில்லை. எங்கு பார்த்தாலும் குப்பைகள், உடைந்துபோன மது பாட்டில்கள் என்று ஒரு குட்டி இந்தியாவை பார்த்த மாதிரி தோன்றுகிறது. வீதிகளில் வாக்கிங் போவதற்கே மிகவும் பயமாக உள்ளது. இனி மீண்டும் அமெரிக்காவுக்கு வரமாட்டேன் என்று நினைக்கிறேன்.


Ramesh Sargam
அக் 09, 2025 08:36

சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதில் பலர் இந்திய குடிமக்கள், குறிப்பாக அங்கு படிக்கச்சென்ற மாணவர்கள். இதை தடுத்து நிறுத்தி ஒரு நிரந்தர முடிவு காணத்தெரியவில்லை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு. ஆனால் வாயை திறந்தால் நான் அத்தனை போரை நிறுத்தியுள்ளேன், எனக்குத்தான் அடுத்த அமைதிக்கான நோபல் பரிசு என்று பயித்தியமாக கூறித்திரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை