உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு வருமான வரி விலக்கு: ஹங்கேரி பிரதமர் அறிவிப்பு

அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு வருமான வரி விலக்கு: ஹங்கேரி பிரதமர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புடாபெஸ்ட்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் விக்டர் ஆர்பன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அவர் பேசியதாவது:குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சியை சமாளிக்க, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஒரு குழந்தை உள்ள பெண்களுக்கு 30 வயது வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். ஹங்கேரியில் ஏற்கனவே,நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி விலக்கு உள்ளது. அதன் விரிவாக்கமாகவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.மூன்று குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கு வரி விலக்குகள் 2025 அக்டோபரிலும், இரண்டு குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு 2026 ஜனவரியிலும் அமலுக்கு வரும்.இவ்வாறு விக்டர் ஆர்பன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
மார் 18, 2025 07:55

ஒருவேளை... மார்க்க ஆட்களை நாட்டிற்கு உள்ளே விடாமல் தடை செய்து இருப்பார்கள் போல.. இல்லையென்றால்... ஒவ்வொரு மார்க்க ஆளும் தங்கள் மனைவிக்கு... இந்த உரிமை தொகை வேண்டி விண்ணப்பிப்பார்கள்... அரசே திவாலாகும் நிலை ஏற்படும்.


RS PRAKASH, TRICHY
மார் 18, 2025 06:52

super


Appa V
மார் 18, 2025 01:20

வருமானத்துக்கு வேலை வாய்ப்பை கொடுத்துவிட்டு இந்த அறிவிப்பை வெளிட்டால் நல்லது ..ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வேலை பார்க்கும் பெண்மணிகள் குழந்தை ஒன்றுக்கு day care கட்டணமாக மாதம் 2500 டாலர் செலவிடுகிறார்கள்


Indhiyan
மார் 17, 2025 23:59

அப்படியே மனைவி,துணைவி , இணைவி உள்ளவர்களுக்கு வரிவிலக்கு கொடுத்தால் சமுதாயம் உதய எழுச்சிபெறும்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2025 22:41

எங்களுக்கு குடியுரிமை குடுங்க .... பலபேரு வர ரெடியா இருக்கோம் ....


Ramesh Sargam
மார் 17, 2025 22:37

தமிழகத்தில் அதிகம் சரக்கு அடிக்கும் பெண்களுக்கு அதிக இலவசங்கள்.


Oru Indiyan
மார் 17, 2025 21:41

அப்பாவையும்.மகனையும்.பார்த்து காப்பி அடிக்கிறார்கள் ஹங்கேரி என்று ஒரு உருட்டு வருமே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை