உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி

துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி

வாஷிங்டன்: சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என கோர்ட் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் , இவர் தனக்கு கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018-ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது.அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் எவராயினும் அவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க கூடாது என்ற விதி உள்ளது.இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் போதை மருந்து பழக்கத்தை மறைத்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shyamnats
ஜூன் 12, 2024 07:21

இங் கோ அணைத்து அரசியல் வியாதிகளின் வாரிசுகளும் போடும் ஆட்டம், தாங்க முடியாமல் உள்ளது. குடும்ப அரசியல் - மகன், பேரன் கொள்ளு பேரன் என்று மத்தியில் இருந்து மானிலம் வரை அதிகமாகி கொண்டே போகிறது.


சண்முகம்
ஜூன் 12, 2024 03:15

போதைப்பொருள் உபயொகிப்பதை மறைத்து துப்பாக்கி வாங்கியதாக குற்றம். அமெரிக்காவில் குறைந்தது ஒரு கோடி பேர் இப்படி இருப்பார்கள். பைடனின் மகனை குறி வைத்து மாட்டியுள்ளார்கள்.


sankaranarayanan
ஜூன் 12, 2024 00:37

இதுதான் அமெரிக்கா என்பது இதே இந்தியாகவாக இருந்தால் ஜாமினில் வெளி வந்து திரும்பவும் துப்பாக்கி ஏந்துவார்


மேலும் செய்திகள்