உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்: மகிழ்ச்சியுடன் சொல்கிறார் நியூசிலாந்து பிரதமர்!

இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் நான்: மகிழ்ச்சியுடன் சொல்கிறார் நியூசிலாந்து பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்டியன்: 'நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்,' என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் கூறினார்.ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி, இன்று லாவோஸ் நாட்டிற்கு சென்றார். வியான்டியனில் பல்வேறு நாட்டு தலைவர்களை, மோடி சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸானை சந்தித்து பேசினார்.பிரதமர் மோடியை சந்தித்த பின் நியூசிலாந்து பிரதமர் லக்ஸான் கூறியதாவது:இந்தியா-நியூசிலாந்து இரு தரப்பு நாடுகளின் பாதுகாப்பு, ஆழமான நட்புறவு, பலமான உறவு குறித்து பேசினோம். பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது.நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன்.நான் நேசிக்கும், பெரிதும் போற்றும் நாடு. நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் சிறப்பாக உள்ளனர்.அங்கு, அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.இது ஒரு அற்புதமான சந்திப்பு, எங்களை மிகவும் அன்புடன் அழைத்து பேசினார். பல்வேறு துறைகளில் நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். தொடர்ந்து பணியாற்றுவோம்.இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கூறினார்.பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸான் உடன் சந்திப்பானது சிறப்பாக இருந்தது. ஜனநாயகம், சுதந்திரம், சட்டம் குறித்து பேசினோம். இரு நாட்டு நட்புறவு மதிப்பு மிகுந்தது. பொருளாதார கூட்டுறவு, சுற்றுலா, கல்வி மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
அக் 11, 2024 18:13

இப்படிச் சொல்லியே அமெரிக்கா ஆகாத போகாத எல்லாவற்றையும் நம்மிடம் விற்பனை செய்வது போல் இவர் புதிதாக எதை நம் தலையில் கட்ட வந்திருக்கிறாரோ, தெரியவில்லையே?


s.sivarajan
அக் 11, 2024 08:48

ஆனால் இந்தியர்கள் பலர் அமெரிக்க ஆஸ்திரேலிய குடிஉரிமை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்


Durai Kuppusami
அக் 11, 2024 07:41

உலகமே போற்றும் நம் பிரதமர் பல்லாண்டு வாழனும்.....


N.Purushothaman
அக் 11, 2024 07:00

இதை எல்லாம் நாங்கள் ஒப்பு கொள்ளமாட்டோம் ...இப்படிக்கு பிரிவினைவாத இண்டி கூட்டணி ....


மோகனசுந்தரம்
அக் 11, 2024 06:28

நம்முடைய பாரத பிரதமர் மோடிஜியால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து உள்ளது.இங்குள்ள கூமுட்டைகளுக்கு அதெல்லாம் ஒன்றுமே தெரியாது. இந்தப் பிச்சை எச்சை காசுக்காக ஆலாய் பறக்கும் இந்த அறிவு கெட்ட மக்களுக்கு ஒன்றுமே தெரியாது


Kasimani Baskaran
அக் 11, 2024 05:38

நியூசிலாந்து குளிர் நிறைந்த மற்றும் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு. இருந்தாலும் பல சவால்களை மீறி அங்கு வாழ்வோர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். வேலைகளை குறைவு, வரி அதிகம். உழைப்பவர்களை மதிப்பவர்கள்...


J.V. Iyer
அக் 11, 2024 04:29

நியூஸிலாந்துக்காரர்கள் நல்ல மனிதர்கள். நல்ல நாடு. நல்லது எல்லாம் வெகு தூரத்தில்தான் இருக்கிறது. கெட்ட மனிதர்கள் கொண்ட பயங்கரவாதிகள் நிறைந்த போர்கிஸ்தான் இந்தியாவின் பக்கத்தில் கொடுமை.


Natarajan Ramanathan
அக் 11, 2024 03:40

லெபனான் போன்ற ஒரு தீவிரவாத கும்பலுக்கு எல்லாம் இந்தியாவில் தூதர் இருப்பது அநியாயம். முதலில் அவனை துரத்த வேண்டும்.


RAJ
அக் 10, 2024 22:09

கரெக்ட் ரமேஷ்.


Anu Sekhar
அக் 10, 2024 22:04

The whole world looking at India .in Modi makes the Indians proud in the eyes of all the countries. We have to give Mவdi all the encouragement and help India to become a strong and peaceful place.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை