உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோதலை நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை: டிரம்ப் நிலையில் மாற்றம்

மோதலை நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை: டிரம்ப் நிலையில் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தோஹா: '' இந்தியா - பாக்., இடையிலான மோதலை நான் தான் நிறுத்தினேன் என சொல்ல விரும்பவில்லை, '' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த 7 முதல் 10ம் தேதி வரை மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் வேண்டுகோளை தொடர்ந்து, போர் நிறுத்தம் உருவானது. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நபராக அறிவித்தார். இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படுவதை நிறுத்திவிட்டேன் என்றார். இதனை அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் டிரம்ப் பேசியதாவது: நான் தான் போர் நிறுத்தம் செய்தேன் ஏன கூறவிரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த உதவி செய்தேன். இந்த பிரச்னை மேலும் மேலும் தீவிரமானது. பல்வேறு வகையான ஏவுகணைகளும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால், நாங்கள் தீர்வு கண்டோம். நான் இங்கும், அங்கும் செல்லவிரும்பவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, பிரச்னை தீரவில்லை என அறிந்தோம். ஆனாலும் அதனை தீர்த்து வைத்தோம். நாங்கள் வர்த்தகம் குறித்து பேசினோம். போருக்கு பதில் வர்த்தகம் செய்வோம் என்றேன். இதனால், பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அவர்கள் அந்த வழியில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.ஆயிரம் ஆண்டு பிரச்னைக்காக போரிடுகின்றனர். அந்த பிரச்னையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என நான் சொன்னேன். என்னால் சரிசெய்ய முடியும். நாம் அனைவரும் அமர்ந்து பேசுவோம். ஆயிரம் ஆண்டு பிரச்னைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் போரிடுவீர்கள். நீண்ட காலமாக போர் நடக்கிறது. இது கடினமான ஒன்று. நீண்ட காலமாக போர் நடக்கிறது. அது உண்மையில் ஒரு நாள் கட்டுப்பாட்டை இழந்து செல்லப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

சகுரா
மே 16, 2025 11:07

அதெல்லாம் இல்லை, எங்க ..தான் போரை நிறுத்தச் சொன்னாரு


Nathan
மே 16, 2025 07:28

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் மதிப்பு அளித்து இந்தியாவிற்கு அழைப்போம் எந்த ஒரு ஒப்பந்தம் செய்ய அமெரிக்காவிற்கு ட்ரம்ப்பை சந்திக்க செல்வதோ கூடாது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை இந்திய பிரதமர் அமெரிக்காவிற்கு பயணம் செய்யு வேண்டாம்.


Nathan
மே 16, 2025 07:18

ட்ரம்ப் இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து சம்பாதிக்கிறார். அவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இந்தியர்கள் ஒரு ரூபாய்க்கு கூட வீடு வாங்க கூடாது.


John
மே 16, 2025 06:44

It is rather unfortunate that US voters have elected a joker/komali as their president.


Rajarajan
மே 16, 2025 06:31

நானும் ரவுடி தான். தயவுசெய்து நம்புங்கப்பா. சொல்றேன், கேக்கமாட்டேங்கறீங்க. இருங்க, வான்டெடா இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில வண்டியில ஏறிக்கறேன் . இப்போவாச்சும் நம்புங்க ப்ளீஸ். இல்லன்னா, உலக பஞ்சாயத்துக்கு என்னை கூப்பிடமாட்டாங்கப்பா.


Kasimani Baskaran
மே 16, 2025 04:11

சிக்கலான பிரச்சினை என்று வந்தால் அமெரிக்காவுக்கே தடுமாற்றம்... ஒரு நாள் ஆயுதம் கொடுத்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அணுகுண்டு போடுமளவுக்கு கூட வரலாம் - பாக்கிகள் அப்படிப்பட்ட நல்லெண்ணம் கொண்டவர்கள். போர் என்றால் என்னவென்று தெரியாத சீனாவிடம் ஆயுதம் வாங்கி அதை வைத்து விளையாடி விடலாம் என்று கனவு கண்டு இருக்கிறார்கள்.


D.Ambujavalli
மே 16, 2025 03:26

சம்மன் இல்லாமல் ஆஜர் ஆக்கிவிட்டு, இப்போது வழ வழ கொழ கொழா என்று பூசி மெழுகி சமாளிக்கும் இந்த பெருதனம் அவசியமா அதிபருக்கு?


Vasan
மே 16, 2025 02:35

Mr.Trump, please intervene and bring to an end the fight between the factions of ADMK, before 2026 elections in Tamilnadu.


மீனவ நண்பன்
மே 15, 2025 22:16

இந்தி படங்களில் கெஷ்டவ் முகர்ஜி என்றொரு காமெடி நடிகர் இருந்தார் ..அவரின் மறுபிறப்பு இவர்


ஆரூர் ரங்
மே 15, 2025 22:09

யாருன்னு நெனச்ச? ஒருமுறை டைப்பூன் போன்ற புயலைக் கூட கையால் நிறுத்தினார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை