உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்: ஒரே பல்லவியை மீண்டும் பாடும் டிரம்ப்

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்: ஒரே பல்லவியை மீண்டும் பாடும் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யா உடன் நடந்த உச்சி மாநாட்டில் எந்த முடிவையும் எட்ட முடியாத நிலையிலும், '' இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் அத்துமீறியது. இதனையடுத்து பிரமோஸ் ஏவுகணை மூலம் அந்நாட்டின் விமானப்படை தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் மிரண்டு போன பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதற்கு இந்தியா சம்மதித்ததால் இந்தப் போர் முடிவுக்கு வந்தது.ஆனால், இந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. பாகிஸ்தான் கெஞ்சி கேட்டதால் தான் தாக்குதலை நிறுத்தினோம் நமது அரசு உறுதிபடத் தெரிவித்துவிட்டது. இதில் யார் தலையீடும் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.ஆனால், டிரம்ப்பை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக அவர் கூறியதை உண்மை என பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்தியா உறுதியாக மறுத்த நிலையிலும் இந்தப் போரை நிறுத்தியது நான் தான் என டிரம்ப் பல மேடைகளில் கூறி வருகிறார்.உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக அலாஸ்கா நகரில் ரஷ்ய அதிபர் புடினுடன் , டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.இந்நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: போர்களில் உயிர்களை காப்பாற்ற வேண்டியது முதல் கடமை. கம்போடியாவில் நடந்ததை நாம் பார்த்துள்ளோம். தற்போது போரில் நான் ஈடுபடாவிட்டாலும், வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இந்தியா பாகிஸ்தானை பார்க்க வேண்டும். ஏற்கனவே போர் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டது. அது அணு ஆயுதப் போராகவும் மாற வாய்ப்பு இருந்தது. அதனையும் நான் தெரிவித்தேன். அதனை நான் தான் நிறுத்தினேன். உயிர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. போர்கள் என்பது மோசமானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி