உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்: வரி விதிப்பால் பிரேசில் அதிபர் காட்டம்

மோடியுடன் பேசுவேன் டிரம்ப் உடன் பேசமாட்டேன்: வரி விதிப்பால் பிரேசில் அதிபர் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியோ டி ஜெனிரோ: ''அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன்'' என பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.பிரேசில் மீது அமெரிக்கா கூடுதலாக 40% வரி விதித்தது. இதனால் பிரேசிலிய இறக்குமதிகள் மீதான மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பேசியதாவது: பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் மிகவும் வருந்தத்தக்க நாள்.அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புடினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். ஆனால் நான் பல அதிபர்களுடன் பேசுவேன். முன்னதாக, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். பிரேசிலின் நிதியமைச்சர் பெர்னாண்டோ ஹடாட், டிரம்பின் நடவடிக்கையை வரவேற்று, அத்தகைய முடிவை எடுக்க, அதிபர் லுலா டா சில்வா தயாராக இருப்பார் என்று கூறினார். இருப்பினும், டிரம்புடன் உடன் பேச விரும்பவில்லை என அதிபர் லுலா டா சில்வா தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ganapathy
ஆக 06, 2025 12:55

மானஸ்தன்...எல்லாரும் ராகுலு & காங்கிரஸ் திருட்டனுங்க மாதிரியா...


Ramesh Sargam
ஆக 06, 2025 12:34

மோடிக்கு ஆதரவாக பேசும் பிரேசில் நாட்டுக்கும் அதிக வரி விதிப்பார் அந்த டிரம்ப். டிரம்ப் ஒரு வரிப்பித்தன்.


Balaji
ஆக 06, 2025 11:27

உலக நாடுகள் எல்லாம் அமெரிக்காவை தனிமை படுத்தவேண்டும். அந்த காலம் விரைவில் வரும். பெரியண்ணன் பாணியில் உலகை ஆட்டுவிக்கிறார்கள்.


அரவழகன்
ஆக 06, 2025 10:53

அமெரிக்க அதிபர் முகத்தில் கரி அப்பிய தருணம்..


KRISHNAN R
ஆக 06, 2025 10:50

டிரம்ப் மீது எல்லா நாடும் அதிருப்தி...


Anand
ஆக 06, 2025 10:38

கேடுகெட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக்களவாணிகளே இவர் சொல்வதை சற்று கேளுங்கள்... மோடி இந்நாட்டிற்க்காக எவ்வளவு பாடுபடுகிறார் என புரியும்.. இத்தாலி கொள்ளைக்கூட்டத்தை நம்பி மோசம் போனீர்கள், இனியாவது திருந்துங்கள், நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கேடு நினைக்காதீர்கள்.


Nagarajan D
ஆக 06, 2025 10:03

இது தான் சரியான சமயம் அமெரிக்கா டாலரை ஒதுக்கிவைத்துவிட்டு அவரவர் பணத்திலேயே வர்த்தகம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.. அமெரிக்காவை எல்லோரும் ஓரம்கட்டிவிட்டாலே தானாக வழிக்கு வருவானுங்க.. முதுகெலும்பு இல்லாத இங்கிலாந்து பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே அமெரிக்காவை தலையில் தூக்கி ஆடுகிறது.. பாகிஸ்தான் கூட அவ்வவ்போது எதிர்க்கிறது ஒரு காலத்தில் உலகையே ஆட்டிப்படைத்த இங்கிலாந்து இன்று செல்லாக்காசாகி இருப்பதை நாம் காண்கிறோம் விரைவில் அமெரிக்காவும் அதே நிலைக்கு சென்றால் தான் உலகத்திற்கு நல்லது


ASIATIC RAMESH
ஆக 06, 2025 09:56

அப்படியே எல்லோரும் ஓரம்கட்டினால்தான் இந்த பேரிக்காய் திருந்தும்... விரைவில் பேரிக்காய் நாடு எத்தியோப்பியா நாடாக வாழ்த்துக்கள்...


மணியனீ
ஆக 06, 2025 09:48

ஆனால் இங்குள்ள அரை வெள்ளைக்கார எதிர்கட்சி தலைவன் ட்ரம்புக்கு ஆதரவு .காங்கிரஸுக்கு ஒவ்வொருவருக்கும் வெட்கமில்லை.


பாமரன்
ஆக 06, 2025 08:56

பெட்ரோல் பம்ப்பு கிட்ட எதாவது சொன்னாலோ... கேள்வி கேட்டாலோ ஓ மை காட் ஓ மை காட்னு எஸ் ஆகாம (நோ பாலா இருந்தாலும்) பவுன்சர் வீசுவாப்ல... எங்காளு கிரிக்கெட்ல வாட்டர் பாய் மாதிரி... எல்லா மேட்சிலும் இருப்பாப்ல... எங்க தள பகோடாஸ் அவ்ளோ முக்கியமானவர்னு ஃபீல் பண்ணி சொல்வாய்ங்க...இப்ப சொல்லுங்க மக்கா யாராண்ட பேசறது ஈசின்னு....