உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 11 புதிய நிபந்தனைகள் விதிப்பு; பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய ஐ.எம்.எப்.,!

11 புதிய நிபந்தனைகள் விதிப்பு; பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய ஐ.எம்.எப்.,!

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்து சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) அதிர்ச்சியை கொடுத்துள்ளது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு 8,350 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது. இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை ஐ.எம்.எப்., விதித்துள்ளது. ஐ.எம்.எப்., விதித்துள்ள 11 புதிய நிபந்தனைகள் பின்வருமாறு:1.சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026ம் நிதியாண்டின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டும். 2025ம் ஆண்டு ஜூன் இறுதிக்குள் இதைச் செய்திருக்க வேண்டும்.2. வரி செலுத்துவோர்களை அடையாளம் காணுவது, பதிவு செய்வது, அவர்களிடம் உரிய வரி வசூலிப்பது, விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்களை ஜூன் மாதத்திற்குள் அமைக்க வேண்டும். 3. சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஒரு நிர்வாக செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்.4. 2027ம் ஆண்டிற்கு பிறகு நிதியை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து அறிக்கையை பாக்., அரசு உருவாக்க வேண்டும்.5.மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவையாவது வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை ம் தேதிக்குள் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும்.6. ஆண்டுக்கு இரண்டு முறையாவது எரிவாயு விலையை உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள், தயாரிக்க ஆகும் செலவிற்கு இணையாக விலையை உயர்த்த வேண்டும்.7. தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு மாற்றுவதை கொண்டு மே மாத இறுதிக்குள் பார்லிமென்ட் சட்டம் இயற்ற வேண்டும்.8.17.6 டிரில்லியன் புதிய பட்ஜெட்டுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் தர வேண்டும்.9. மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3.21, உச்சவரம்பை ஜூன் மாதத்திற்குள் நீக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.10. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.11.2035ம் ஆண்டுக்குள் தொழில்துறை பூங்காக்கள் மண்டலங்களுக்கான அனைத்து நிதிச் சலுகைகளையும் நீக்குவதற்கு, நடப்பு 2024ம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.இந்த நிபந்தனைகளை புதிய நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படாது என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுடன் சேர்த்து,மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளன. எனினும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபந்தனைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Manicklal Chakraborty
மே 19, 2025 09:17

இட்ஸ் ஆல் வேஸ்ட் .


sasikumaren
மே 19, 2025 04:59

சமீபத்தில் நடந்த உலக கிரிக்கெட் போட்டியில் பக்கிஸ் பெய்த கனமழையால் மைதானத்தில் தேங்கிய மழை நீரை அகற்றாமலேயே ஆயிரம் கோடி செலவு செய்து விட்டதாக கதை விட்ட அயோக்கிய நாடுதான் பக்கிஸ் நாடு


ஆரூர் ரங்
மே 18, 2025 22:04

ராணுவத் தலைமை மற்றும், நீதிபதிகள் ஊழல் செய்வதை நிறுத்தினாலே கடன் வாங்கத் தேவையில்லை


Ramesh Sargam
மே 18, 2025 21:07

பயங்கரவாதிகளுக்கு சோறு போட்டு வளர்க்க கூடாது. வேண்டுமென்றால் பன்றிக்கறி கொடுக்கலாம்.


N Annamalai
மே 18, 2025 20:01

துப்பாக்கி வாங்கக் கூடாது .என்ற விதி சேர்க்கவேண்டும் .


ganesh ganesh
மே 18, 2025 19:50

கண் துடைப்பு . இதில் 3 ஆண்டுகளுள் உள்ள கார் இறக்குமதி தடை பார்த்தால் புரியும் . இந்த கேடு கேட்ட ஐரோப் அமெரிக்கா பற்றி கவலைப்படாமல் நாம் செயல்படவேண்டும்.


R. SUKUMAR CHEZHIAN
மே 18, 2025 19:39

பயங்கரவாதம், பயங்கரவாதிகள் அவர்களின் மதவாத மூலை சலவை பயிற்சி முகாம் அதனால் ஏற்படும் ஆபத்து, பாகிஸ்தான் மத பயங்கரவாதிற்கு செய்யும் செலவு பற்றி எந்த தடை நிபந்தனைகள் இல்லாமல் போனது வெறும் கண்துடைப்பு. மியான்மாரை எதன் அடிப்படையில் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது ஐ.எம்.எப்.


Anbuselvan
மே 18, 2025 19:21

இப்பவே எவ்வுளவு எவ்வுளவு யார் யார் ஏப்பம் விடணும்னு அவங்க முடிவு செஞ்சுட்டாங்க. இவங்க நிபந்தனை போட்டால் என்ன போடாட்டி என்ன ? இந்த விஷயத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் இவர்களும்.


Sangi Saniyan
மே 18, 2025 17:47

மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3.21, உச்சவரம்ப அப்படினா நம்ம நாட்டை விட அங்க கம்மி அப்படித்தானே


raja
மே 18, 2025 17:27

இது இன்னும் தலையில் இடி இறக்கின மாதிரி இல்லையே....


சமீபத்திய செய்தி