உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் பலியாயினர்.பாகிஸ்தானின் பிரதான கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக மாஜி கிரிக்கெட் அணி கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் உள்ளார். இவர் தனது பதவி காலத்தில் அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.இதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் பாலுசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு வரும் பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் பரபரப்பு காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஜன 31, 2024 09:49

நல்லா வெடிக்கட்டும். பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.


Ramesh Sargam
ஜன 30, 2024 23:58

பாகிஸ்தானில் குண்டு வெடிக்காமல், பின்ன என்ன வெடிக்கும்? பாகிஸ்தான் என்றாலே, பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, கலவரம் இவைகள்மட்டும்தான். கடலில் சிக்கிய பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை வீரர்கள் காப்பாற்றுவார்கள். ஆனால், பாகிஸ்தானில் சிக்கிய ஒரு சில அப்பாவி பாகிஸ்தானியர்களை நம்மால் காப்பாற்றமுடியாது.


K.Muthuraj
ஜன 31, 2024 09:36

....சில அப்பாவி பாகிஸ்தானியர்களை நம்மால் காப்பாற்ற முடியாது.... அங்க அப்பாவி பாகிஸ்தானியன்னு எவனும் கிடையாது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை