உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; கடும் தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; கடும் தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ''ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார்.நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலாசனை கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் பேசியதாவது: ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படையினருக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படும் வழக்குகளில் நீதி கிடைக்க வேண்டும்.ஆபத்து மிகுந்த போர்க்களங்களில் அமைதி காக்கும் பணி மேற்கொள்ளும் ஐ.நா., படையினரின் பணி, மிகுந்த சிக்கலானது. ஆனால், ஐ.நா., படையினர் தாக்கப்படும் குற்றங்களில், பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற தன்மை, சர்வதேச அமைதி காப்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது. குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.எனவே, ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவது நமது பொதுவான கடமை. உலகளாவிய ஐ.நா. அமைதி நடவடிக்கைகளின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் தான் நமது எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 16, 2025 13:48

தம்பிகளா கேளுங்க, வேல்முருகன் ஒரு அறிவாலய .... நீங்க த.வா. க வில் சேருவதைவிட நேர தி.மு.க வில் சேர்ந்துவிடலாம்.


Rangarajan Cv
ஜூலை 16, 2025 13:44

In the present situation, whether UN is any relevance?


Ramesh Sargam
ஜூலை 16, 2025 12:31

பூனைக்கு யார் மணி கட்டுவது?


அசோகன்
ஜூலை 16, 2025 12:21

இவங்களே தீவிரவாதிகளை உருவாக்குவார்கள்... கலவரம் வெடித்ததும் இடையே புகுந்து கொள்ளை அடிப்பார்கள்.. அதற்கு பாதுகாப்பு ஐ நா பாதுகாப்பு படை.. திருடனுக்கு போலீஸ் பாதுகாப்பு போல... இதைத்தான் மேலை நாடுகள் காலம் காலமாக செய்து சுரண்டி வருகிறது


புதிய வீடியோ