வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லா தெற்காசியா நாடுகள் ஒன்று சேரவேண்டும், பாகிஸ்தான் நீங்கலாக.
சிங்கப்பூர்: உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, மியான்மர் போன்ற அரசியல் சவால்கள் உள்ளிட்ட சமகால பிரச்னைகளை கையாள்வதில், இந்தியா - ஆசியான் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.'ஆசியான்' எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில், இந்தியா, புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆசியான் - இந்தியா நெட்வொர்க் அமைப்பின் சிந்தனை குழாமின் 8வது வட்டமேசை கூட்டம், சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்ற நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ளது. இந்த நாடுகளில் உருவாகும் தேவைகள் பரஸ்பரம் நம் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய உற்பத்தி சக்திகளாக நம்மை மாற்றுகிறது. நம் நுகர்வு தேவைகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் முக்கிய பொருளாதார உந்துசக்திகளாக உள்ளன. தீவிர பருவநிலை மாற்றங்கள், உணவு பாதுகாப்பு, உலக அளவிலான பெருந்தொற்று தடுப்பு அனுபவங்கள், சுகாதார பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் போன்ற சமகால பிரச்னைகளை கையாள்வதில், நம் ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.மியான்மர் போன்ற பகிரப்பட்ட பிராந்தியங்களின் அரசியல் சவால்களை இந்தியாவும், ஆசியான் நாடுகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங், ராணுவ அமைச்சர் யங் ஹென் ஆகியோரை நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
எல்லா தெற்காசியா நாடுகள் ஒன்று சேரவேண்டும், பாகிஸ்தான் நீங்கலாக.