உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிக்கலான நிலையில் இந்தியா - கனடா உறவு; ஒப்புக்கொள்கிறார் கனடா அமைச்சர்

சிக்கலான நிலையில் இந்தியா - கனடா உறவு; ஒப்புக்கொள்கிறார் கனடா அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: ''உலக அரங்கில் முக்கியமான சக்தியாக திகழும் இந்தியாவுடன் கனடாவின் உறவு சிக்கலான நிலையில் உள்ளது,'' என கனடா வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னரே, இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கனடாவின் வெளிவிவகார துறை தொடர்பான கமிஷன் முன்பு அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் டேவிட் மோரிசன் ஆஜராகி கூறியதாவது: கனடாவின் பிராந்திய ஒற்றுமை மதிக்கப்பட வேண்டும் என்பதில் கனடாவின் கொள்கை தெளிவாக உள்ளது.உலகில் ஒரே இந்தியா தான் உள்ளது என்பதிலும் தெளிவாக உள்ளோம்.காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல நாடுகளில் உள்ளனர். கனடாவிலும் உள்ளனர். பல தசாப்தங்களாக இந்தியாவும் கனடாவும் கூட்டாளிகளாக உள்ளன. உலக அரங்கில் இந்தியா முக்கியமான சக்தியாக திகழ்கிறது. அந்நாட்டின் கொள்கைகளை கனடா கவனத்தில் எடுத்துள்ளது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவுக்காக பணியாற்றி வருகின்றன.2023 செப்., டில்லியில் நடந்த ஜி20 மாநாடு வரை இரு நாட்டு உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. உறவானது சிக்கலான நிலையில் உள்ளது. இதனை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Narayanan
அக் 07, 2024 15:07

தவறுதல் மனிதனின் பழக்கம் . உறவை சீர்செய்ய ஆயுத்தம் செய்யுங்கள் . சிக்கல் செய்தது நீங்கள் உங்களால்தான் சிக்கலை சரியாக்க முடியும்.


Kumar Kumzi
அக் 07, 2024 12:01

ஒட்டு பிச்சைக்காக ஒரு உண்மையான நாட்டின் நட்பை கெடுத்துக்கொண்டான் கனடா கோமாளி


Sivagiri
அக் 07, 2024 11:36

அவன் அவன் வேலையை மட்டும் பாத்துட்டு போனால் பிரச்சினை இல்லை , தேவை இல்லாமல் சிறுத்தையை சீண்டி பார்த்தால் , வம்புதான் . . .


RAJ
அக் 07, 2024 07:50

Canadian people must choose the right prime minister. Then everything will be alright. Current prime minister is threat to indias soverginity.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 10:06

As you/we aware, Canadian Sikhs had somehow gained power to decide the public representatives. Thats why any government will support them.


VENKATASUBRAMANIAN
அக் 07, 2024 07:43

காலிஸ்தான் தள தீவிரவாதிகளை ஆதரித்தால் சிக்கல்தான்


raja
அக் 07, 2024 07:39

தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை உருவாக்கி ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் அது இந்தியாவின் எதிரி நாடுதான்.. இது தான் பிரதமர் மோடி அரசின் வெளியுறவு கொள்கை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை