இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் சக்திகள்: ஜெய்சங்கர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பிரஸ்ஸல்ஸ்: '' இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் சக்திகளாக உருவெடுத்துள்ளன,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய யூனியனின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார வழித்தடம், சுத்தமான எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.இதனைத் தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஜெய்சங்கரிடம் ரஷ்ய - உக்ரைன் இடையிலான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர், ' அண்டை நாடுகளுக்கு இடையே ஆழமான வேறுபாடுகள் இருந்தாலும் அதற்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என ஆரம்பம் முதல் கூறி வருகிறோம். போர் துவங்கினால், போர்களத்தில் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்' என்றார்.தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு, இந்தியாவிற்கு முன்னரே, நவீனமாயமாக்கல் கொள்கைக்கு சீனா மாறியது. அப்போது இந்தியாவில் இருந்த அரசுகள் ஒன்றும் செய்யவில்லை. புதிய சம நிலையை உருவாக்கும் வளர்ந்து வரும் சக்திகளாக, இந்தியாவும், சீனாவும் உருவெடுத்து உள்ளன. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.