உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா தேர்வு

மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஜெனீவா: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினராக ஏழாவது முறையாக இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக வைத்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் செயல்படுகிறது. இதில், 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உறுப்பினர்கள் பதவிக் காலம், வரும், டிச., 31ல் முடிவடைய உள்ளது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில், இந்தியா ஏழாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 முதல் 2028 வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக திகழ உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை