உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்

இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'பாகிஸ்தான் எனது ஜென்மபூமியாக இருக்கலாம். ஆனால், எனது முன்னோர் வாழ்ந்த இந்தியா எனக்கு கோவில் போன்றது,' என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த வீரர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தன்னிடம் பாகுபாடு காட்டியதாகவும், தன்னை மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அண்மை காலமாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3vq9dalb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வரும் கனேரியா, இந்திய குடியுரிமை பெற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், 'இந்தியா தன்னுடைய முன்னோர் வாழ்ந்த மண், இந்தியா எனக்கு கோவில் போன்றது' என்று கனேரியா தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை; ஏன் நீங்கள் பாகிஸ்தானைப் பற்றி பேசுவதில்லை, இந்தியாவின் உள்விவகாரங்களை பற்றியே பேசி வருகிறீர்கள் என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவை அனைத்தும் இந்திய குடியுரிமை பெறுவதற்காகவே நான் இதுபோன்று செய்வதாக குற்றம்சாட்டியிருந்தனர். பாகிஸ்தான் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றுள்ளேன். அதேவேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் என்னிடம் பாகுபாடு காட்டினார்கள். என்னை மதம் மாறச் சொல்லி கட்டாயமும் செய்தனர். இந்திய குடியுரிமை பெறும் விவகாரத்தில் நான் மிகவும் தெளிவாக உள்ளேன். பாகிஸ்தான் எனது ஜென்மபூமியாக இருக்கலாம். ஆனால், எனது முன்னோர்களின் பூமியான இந்தியா எனது தாய்நாடு. இந்தியா எனக்கு கோவில் போன்றது. இதுவரையில் இந்திய குடியுரிமை பெறுவது தொடர்பாக என்னிடம் எந்த திட்டமும் இல்லை. எதிர்காலத்தில் என்னை போன்றவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்பினால், சிஏஏ ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, என்னுடைய செயல்பாடுகள் இந்திய குடியுரிமை பெறுவதற்காக என்று கூறுவது தவறானது. நான் தர்மத்திற்காக தொடர்ந்து நிற்பேன். நமது சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் தேசவிரோதிகள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்களை அம்பலப்படுத்துவேன். எனது பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களுக்கு, ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்துடன், நான் என் குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று கூறுகிறேன். எனது விதி பகவான் ஸ்ரீ ராமரின் கைகளில் உள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 04, 2025 20:03

அங்கு உள்ள வெறிபிடித்த கூட்டம் வாய்ப்புக்கிடைதால் என்ன செய்யும் என்று இவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும். எட்டாத தூரத்தில் இருக்கும் இவரை இறைவன் காப்பாற்றட்டும்.


Kumar Kumzi
அக் 04, 2025 19:26

இவ்வளவு காலம் ,நீங்கள் இந்த காட்டுமிராண்டிகளிடம் வாழ்ந்ததே பெரிய விஷயம்...


Kumar Kumzi
அக் 04, 2025 19:23

எப்போதும் தாய்நாடு உங்களை வரவேற்கும்


நிமலன்
அக் 04, 2025 18:54

பாத்துப்பா, அந்த மிருகங்கள் உன்னை போட்டுத்தள்ளிட போறாங்க.


Rathna
அக் 04, 2025 18:43

பாராட்டுக்கள். அவர் பாகிஸ்தானில் பட்ட கஷ்டம் அவருக்கு தான் தெரியம். குடும்பத்தின் உயிரை காப்பாற்ற அமெரிக்கா தப்பி சென்று உள்ளார்.


sankaranarayanan
அக் 04, 2025 18:12

அய்யா ஜாக்கிரதையயாக் இருங்கள் வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ளாதீர்கள் மவுனமாகவே இருங்கள்.அமைதி கிடைக்கும் .மனம் நிம்மதியாக இருக்கும்.


சமீபத்திய செய்தி