உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப்., கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு: ஓட்டெடுப்பை புறக்கணித்தது

பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப்., கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு: ஓட்டெடுப்பை புறக்கணித்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பையும் புறக்கணித்தது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது. உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டு உள்ளன.பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர்( ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்த கடன் பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட இருந்தது. இந்த கடனை வழங்குவுது குறித்து ஐஎம்எப் அமைப்பு இன்று ஆய்வு செய்ய இருந்தது..ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது என்பது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். அந்த சர்வதேச நிதியத்தை அணுகப் போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐஎம்எப் அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து நீண்ட காலம் கடன் வாங்கும் பாகிஸ்தான், அதன் திட்டங்களை கடைபிடிப்பதிலும், நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துவது இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நடவடிக்கைகளில் ராணுவத்தின் ஆதிக்கம் உள்ளது. மக்களால்தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தும் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
மே 10, 2025 06:56

அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்ட F16 ரக விமானங்களை மற்றைய நாட்டின் யுத்தத்தில் பயன்படுத்துவதில்லை என்று அளித்த வாக்குறுதியை போல பாக் இந்த விஷயத்திலும் செய்யும் என்பதனை ஏன் IMF மறந்து விட்டது


மீனவ நண்பன்
மே 09, 2025 23:33

பாகிஸ்தான் ரூபாய் அச்சடித்து இந்தியாவில் இருந்து டிரோன்கள் மூலம் வானிலிருந்து இறைக்கலாம்


Karthik
மே 09, 2025 22:58

உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன: ஜெய் ஹிந்த்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை