உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!

இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என புதிய போப் லியோ தெரிவித்தார்.அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட், 69, புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் போப் 14ம் லியோ என்று அழைக்கப்படுகிறார். இவர், புதிய போப்பாக பொறுப்பேற்று கொண்ட பின்னர் முதல் ஞாயிற்று கிழமையான இன்று (மே 11) பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:உக்ரைன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். விரைவில் அமைதியை கொண்டு வர அனைத்தையும் செய்ய வேண்டும். அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். காசா பகுதியில் நடக்கும் சம்பவங்களால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கப்பட வேண்டும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புகிறேன். உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கிறேன். இவ்வாறு போப் லியோ பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GoK
மே 12, 2025 07:23

உலகெங்கும் ஆயுத விற்பனை செய்வது மேற்கத்திய நாடுகள் அதை உங்களால் நிறுத்த முடியுமா பாருங்கள்.


நிக்கோல்தாம்சன்
மே 12, 2025 04:04

அய்யா ,அப்படியே ஒரு வார்த்தை மற்றைய நாடுகளில் ஆயுதத்தை சப்ளை செய்து தீவிரவாதத்தை வளர்க்கும் அமெரிக்காவை கண்டியுங்களேன்


கோகுல் மதுரை
மே 12, 2025 01:00

அந்த தேமா சாகும் வரை நிக்காது போப்.... வாழ்த்துக்கள்


மீனவ நண்பன்
மே 12, 2025 00:11

இவர் புது பெரியவா லெவல் தான் ....ட்ரம்ப் தான் அசல் பெரியவர் ...


Chess Player
மே 11, 2025 23:14

Conversion is a business


spr
மே 11, 2025 21:09

இவர்களை போன்றோர் அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கைவிடும்படி கோரிக்கை வைக்க வேண்டும். பிற மதத்தவருக்கு இவர் கோரிக்கை தான் வைக்க முடியும் ஆனால், உண்மையான கிருத்தவ மக்களுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்காதீர் என்று இவர் அறிவுரை சொல்லலாம். அதை விடுத்து இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது இந்தப் பலனையும் தராது. முடிந்தால் வல்லரசு நாட்டுத் தலைவர்களை சந்தித்து உலக சமாதானத்திற்காகப் பாடுபடச் சொல்ல வேண்டும். போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்ய வேண்டாமெனவும் கோரிக்கை வைக்கலாம்.


மீனவ நண்பன்
மே 11, 2025 20:31

ரஷ்ய உக்ரேன் போர் நிறுத்தத்திற்கும் பாடு படவேண்டும்


புதிய வீடியோ