உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆதரவு: ஐநாவில் இந்தியா திட்டவட்டம்

உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஆதரவு: ஐநாவில் இந்தியா திட்டவட்டம்

நியூயார்க்: உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகளை ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது என ஐநாவில் இந்திய நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.இது குறித்து ஐநாவில் விவாதத்தின் போது, இந்திய நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகளை ஆதரிக்க தயாராக உள்ளோம். எதற்கு போர் நடத்துவது தீர்வல்ல. எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. உக்ரைனின் நிலைமை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது.அப்பாவி உயிர்களை இழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. போர் களத்தில் எந்த தீர்வையும் காண முடியாது.இது போரின் சகாப்தம் அல்ல. உக்ரைனில் நடந்து வரும் மோலை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்ட நம்பகமான ராஜதந்திர முயற்சிகளை ஆதரிக்க இந்தியா தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி தொடர்பில் இருக்கிறார். இது அமைதியை கொண்டு வர இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது. இவ்வாறு பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை