உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள் : பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள் : பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

வாஷிங்டன்: செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தி பார்பர் சட்ட நிறுவனம், கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை செல்பி எடுக்கும் போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r6d3nn87&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆய்வு, செல்பி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாக பயன்படுத்தி நடத்தப்பட்டது. அதில் அதிக மக்கள் தொகை, ரயில் தண்டவாளங்கள், பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு செல்வது, சமூக ஊடக கலாசாரம் உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்யபட்டது. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1 சதவீதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆபத்தான நாடுகள் பட்டியல்:

1) இந்தியா-271 நிகழ்வுகள் (214 உயிரிழப்புகள், 57 காயங்கள்) 2) அமெரிக்கா- 45 நிகழ்வுகள் (37 உயிரிழப்புகள், 8 காயங்கள்)3) ரஷ்யா- 19 (18 உயிரிழப்புகள் மற்றும் ஒரு காயம்) 4) பாகிஸ்தான்- 16 இறப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது, எந்த காயமும் இல்லை, 5) ஆஸ்திரேலியா -13 செல்பி இறப்புகளுடன் முதல் 5 இடங்களைப் பிடித்தது.6) இந்தோனேசியா (14 உயிரிழப்புகள்)7) கென்யா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் (தலா 13 உயிரிழப்புகள்)செல்பி தொடர்பான அனைத்து இறப்புகளிலும் பெரும்பாலும் 46 சதவீதம் கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டமைப்புகளில் இருந்து விழுவதே காரணமாக இருப்பதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ்வேள்
ஆக 27, 2025 09:28

செல்ஃபி மட்டுமா? பெண்களிடம் அத்துமீறி-ஜொள்ஃபி- எடுத்து அடி வாங்குவதும் நம்ம சனங்கள் மட்டுமே..


Palanisamy Sekar
ஆக 27, 2025 02:03

நம்ம அரசியல்வாதிகளிடம் உள்ள அதே விளம்பர மோகம்தான் காரணம் இந்த செலஃபீ எடுக்கும் நபர்களிடமும் காணப்படுகின்றது. தலைக்கு ஹெல்மெட் போடச்சொல்லி எவ்வளவு சொன்னாலும் கூட மதிக்காமல் போவது ஏனென்றால்.. அவரு பைக் ஓட்டுவதை பிறர் பார்க்கணுமே என்கிற அந்த பந்தாவை போலத்தான் இந்த செலஃபீ பைத்தியங்களிடமும் காணப்படுகின்றது.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 27, 2025 01:54

நம்ம ஜீயோட செல்பி மோகம் உலகறிந்த ஒன்று


Ramesh Sargam
ஆக 27, 2025 00:42

செல்பி எடுப்பதும் ஒருவகையான தற்கொலை முயற்சிதான்.


முக்கிய வீடியோ