உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இனிப்பாகும் இந்திய உறவு; பெருமிதம் கொள்கிறது பென்டகன்; அமெரிக்காவில் இது நம்ம காலம்!

இனிப்பாகும் இந்திய உறவு; பெருமிதம் கொள்கிறது பென்டகன்; அமெரிக்காவில் இது நம்ம காலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு வலுவானது' என அமெரிக்க ராணுவத் தலைமையகம் 'பென்டகன்' தெரிவித்துள்ளது.சர்வதேச அளவிலான விவகாரங்களில், இப்போதெல்லாம் இந்தியாவுடன் கலந்தாலோசனை செய்ய அமெரிக்க அரசு தவறுவதில்லை. இதற்கு இந்தியாவின் பொருளாதார வலிமை, புவியியல் முக்கியத்துவம் போன்ற காரணங்கள் உள்ளன. இந்தியாவுடன் நட்பு பாராட்ட, அமெரிக்க அரசும், அதிகாரிகளும் தாங்களாகவே விரும்பி முன் வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லினுடன் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ராணுவ உறவு

இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள ராணுவ உறவு குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ உறவு வலுவானது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தவும் இந்த உறவு பேருதவியாக இருக்கிறது. இந்திய பாதுகாப்பு துறையின் அமைச்சரின் பயணம் இரு நாட்டு உறவை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தளவாடங்கள்

அமெரிக்க பாதுகாப்பு துறையுடன் உயர்மட்ட கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார். எதிரிப்படைகளை தாக்கி அழிக்கக்கூடிய 31 'எம்க்யூ - 9பி' ரக ஆளில்லா சிறிய ட்ரோன் விமானங்கள், 'ஸ்ட்ரைக்கர்'கள் எனப்படும் கவச வாகனங்கள் வாங்குவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர். வரும் ஆகஸ்ட் 26ம் தேதி, ராஜ்நாத் சிங் நாடு திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

lalithaganesan
ஆக 25, 2024 06:24

இது சம்பிரதாய மான வார்த்தைகள். நம் அரசு அதிக கவனதுடன் கையால்வர்.


lalithaganesan
ஆக 25, 2024 06:21

எல்லாம் சம்பிரதாய வார்த்தைகள். நம் அரசு அதிக எச்சரிக்கையுடன் இருக்கும். கடவுள் தான் நமக்கு துணை.


VAIDYANATHAN RAGHURAMAN
ஆக 23, 2024 14:41

USA cannot be trusted. They are alleged to be behind the recent crisis in Bangladesh aimed at weakening and cornering India. We should tread very carefully.


M Ramachandran
ஆக 23, 2024 14:18

இந்த புயல்களுக்கு வாயில் இனிப்பு போட்டால் ஆ என்று வாய் பிளப்பாண்கள். நம்பிக்கையயை தோகதிர்ற்கும் அஞ்ச மாட்டான்கள்


Ramesh Sargam
ஆக 23, 2024 12:20

எதற்கும் கொஞ்சம் இடைவெளி இருப்பது இந்தியாவுக்கு நல்லது.


Duruvesan
ஆக 23, 2024 09:42

ஒன்னும் இல்ல பாஸ், ஏதோ வியாவாரம் பண்ணனும், அதுக்கு builtup


Kumar Kumzi
ஆக 23, 2024 12:49

உனது பாஸ் எதுக்கு அமெரிக்கா போறாரு கொத்தடிமையே


ச. ராமச்சந்திரன்
ஆக 23, 2024 09:39

யார் எதிரி? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் யார் எதிரி? சொல்லுங்கள் எதிரி நண்பரே?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ