உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து பலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் யாரும் போன் செய்வதில்லை. குறுந்தகவலும் அனுப்புவதில்லை. ஆனால் சிலர் தூதரகத்தில் இருந்து பேசுவதாக யாரும் அழைத்தால் விழிப்போடு இருக்கவும். குடியுரிமை, குடிபெயர்ந்தோர் விஷயமாக யாரும் பேசினால் நம்ப வேண்டாம். ஒன்டைம் பாஸ்வேர்டு, பாங்க் விவரம், மற்றும் சொந்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம். யாரும் பணம் கேட்டால் வழங்க வேண்டாம். இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால் Pravasi Bharatiya Sahayata Kendra (PBSK) அமைப்புக்கு புகார் தெரிவிக்கலாம். உதவிக்கான தொலைபேசி எண்: 80046342.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dubai Thamizhan
செப் 29, 2024 12:17

விழிப்புணர்வு நிச்சயம் தேவை பணம் பறிபோனால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு நேரடியாக சென்று புகார் கொடுத்து தகுந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவும். மேலும் 24 மணி நேரத்திற்குள் உங்கள் பேங்க் க்கு சென்று பரிவர்த்தனையை புகார் செய்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கேட்கவும்.


அப்பாவி
செப் 28, 2024 19:43

80046342 கு போன் செய்து புகார் கொடுக்கலாமாம். துபாயில் வெறும் 7 இலக்க போன் நம்பர்தானா?


narayanansagmailcom
செப் 28, 2024 13:36

இந்தியாவிலும் தினசரி நிறைய மக்கள் ஏமாந்து பணத்தை பறிகொடுக்கிறார்கள்.


புதிய வீடியோ