உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் அதிகரித்து வரும் புலம் பெயர் இந்திய மருத்துவர்கள்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் புலம் பெயர் இந்திய மருத்துவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்காவிற்கு புலம் பெயர் மருத்துவர்களாக குடியேறுபவர்களின் ஐந்தில் ஒருவர் இந்தியர் என ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் செயல்படும் ரீமிலிட்டி என்ற அமைப்பும் , எம்.பி.ஐ., எனப்படும் குடியேற்ற கொள்கை மையம் ஆகியன வெளியிட்டுள்ள குறியீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவில் மொத்தம் 9.9 லட்சம் மருத்துவர்களின், 2.06 லட்சம் பேர் பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறிய புலம் பெயர் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதலிடத்தில் பிலிப்பைன்சும், இரண்டாமிடத்தில் மெக்ஸிகோவும், மூன்றாவது இடத்தில் இந்திய மருத்துவர்கள் உள்ளனர்.இதன் மூலம் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து மருத்துவ பணியாற்ற வருபவர்களில் ஐந்தில் ஒருவர் இந்திய மருத்துவர்கள் என 59 ஆயிரம் பேர் உள்ளனர். தவிர சீனா, ஹாங்காங், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த மருத்துவர்களும் உள்ளனர்.அதே வேளையில் நர்ஸிங் உதவியாளர்கள், மற்றும் சுகாதார நிபுணர்களும் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து பணியாற்ற வருபவர்களில் இந்தியர்கள் முதலிடத்திலும், பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ நாட்டவர்கள் உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராம்தேவ்
ஜூன் 16, 2024 07:44

எல்லோரும் நீட் தேர்வு எழுதி. படிச்சு டாக்டராயி அமெரிக்க தாய்நாட்டிற்கு சேவை செய்யறவங்க...


naadodi
ஜூன் 16, 2024 04:16

அப்படி ஒன்றும் இல்லை. Emergency ஆக இருப்பின் அதற்கும் வகையுண்டு. பெரிய ஆஸ்பத்திரி என்றெல்லாம் கூட போகவேண்டாம். இப்போது சிறிய Emergency நிலையங்கள் நிறைய உள்ளன. Emergency இல்லையெனில் தாங்கள் கூறியபடி appointment வாங்கி செல்லலாம் .


rama adhavan
ஜூன் 16, 2024 06:24

சரியான பதிவு. எமெர்ஜெண்சியில் நன்கு கவனிப்பார்கள்.


chennai sivakumar
ஜூன் 16, 2024 01:53

மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி. உங்கள் மெடிகல் இன்சூரன்ஸ் எந்த கம்பனி. உங்கள் பதில் அந்த மருத்துவர் இன்சூரன்ஸ் கம்பெனி இருந்தால் மேற்கொண்டு நடவடிக்கை. நம்ம ஊரு மாதிரி போய் preion இல்லாமல் ஒரு அஸ்புரோ/ அனாசின்/ சிரோசின் கூட வாங்க முடியாது. ஆனால் மற்ற equipment and facilities அபாரம்.


rama adhavan
ஜூன் 16, 2024 06:21

தவறான பதிவு. இன்சூரன்ஸ் விவரம் கவுண்டர் கிளெர்க் பார்த்துக கொள்வார். கம்ப்யூட்டரில் விவரம் தெரிந்து விடும். பல மாத்திரைகள் பார்மசியில், வால்மார்ட், காஸ்ட் கோ, இடங்களில் தாராளமாக மருந்து சீட்டு இன்றியே வாங்கலாம்.


Ramesh Sargam
ஜூன் 15, 2024 21:11

அதனால் என்ன பயன். ஏதாவது உடல்நல பிரச்சினை என்றால் அமெரிக்காவில், இந்தியா மாதிரி உடனே ஒரு மருத்துவரை பார்க்க முடியாது. மருத்துவமனைக்கும் செல்ல முடியாது. போன் செய்து, appointment கிடைத்து, நாம் அவர்களிடம் செல்வதற்குள் நம் பிரச்சினை தானாகவே சரியாகி இருக்கும். அல்லது முற்றிப்போய் சீரியஸ் ஆகி இருக்கும்.


rama adhavan
ஜூன் 15, 2024 21:09

அவர்கள் அமெரிக்கர்களே. இங்கு அவர்களை இந்தியர் என பிரிப்பது இல்லை. அவர்களது ஆங்கில பிரயோகம் அமெரிக்கர் போலவே இருக்கும். அவர்கள் இந்தியர்களே அல்ல.இந்த கட்டுரை தமிழகத்தில் இன்றும் பிராமினர்களை வந்தேறிகள் என்பது போல் உள்ளது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை