அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல்; இந்தியருக்கு கோர்ட் ஜாமின்
வாஷிங்டன்: அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கிய வழக்கில் கைதன இந்திய வம்சாவளி ஆலோசகர் ஆஷ்லே டெல்லிஸூக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ். இவர் அமெரிக்க ஆய்வாளர் மற்றும் தெற்காசிய வெளியுறவுக் கொள்கையின் ஆலோசகராக உள்ளார். 2001ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். அந்நாட்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர். இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.அமெரிக்காவின் விமானப்படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கினார் என்றும், சீன அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கடந்த 15-ம் தேதியன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். விர்ஜினியாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் ரகசிய அறையில் 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பதுக்கி இருப்பதை கண்டறிந்தனர்.விர்ஜினியா கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்தவழக்கில் ஜாமின் கோரி ஆஷ்லே டெல்லிஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி 1.5 மில்லியன் டாலர்க்கான பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டு ஆஷ்லே டெல்லிஸை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டு, வழக்கை நவ,04 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.