உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்ற இந்தியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ம.பி., மாநிலம் கேஆர் பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் என் கிக்கேரி(57). இவர் மைசூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஹோலோவோர்ல்ட் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது மனைவி ஸ்வேதா(44). இணை நிறுவனர். அமெரிக்காவில் இருந்த இவர்கள் 2017 ல் மைசூரு வந்து இந்த நிறுவனத்தை துவக்கினர். ஆனால், கோவிட் காரணமாக நிறுவனத்தை மூடிவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். வாஷிங்டன்னில் நியூகாஸ்டில் நகரில் வசித்து வந்தஇவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 24ம் தேதி வீட்டில், ஹர்ஷ்வர்தன், மனைவி மற்றும் 14 வயதான மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த போது, மற்றொரு மகன் வீட்டை விட்டு சென்றதால், அவர் உயிர் தப்பினார். சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

India our pride
ஏப் 30, 2025 15:58

செயற்கையான வாழ்க்கை, மேற்கத்திய வாழ்க்கை முறை பல உயிர்களை கொண்டு செல்கிறது. அனுதாபங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 29, 2025 23:08

அடடா ....


மீனவ நண்பன்
ஏப் 29, 2025 22:58

போட்டி... பிசினஸ் செய்வதில் சிக்கல் .. விலைவாசி ...வேலையில்லா திண்டாட்டம் ...யூனிவர்சிட்டிகளில் அட்மிஷன் குறைகிறது ..ஏகப்பட்ட மனஉளைச்சல்


Anantharaman Srinivasan
ஏப் 29, 2025 22:54

அமெரிக்காவில் ஹர்ஷ்வர்தன், மனைவி மற்றும் 14 வயதான மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருவேளை கடன் தொல்லை அதிகமாகியிருக்கலாம்.


மீனவ நண்பன்
ஏப் 30, 2025 02:12

அமெரிக்காவில் சில இந்தியர்கள் செல்வா செழிப்பில் வாழ்கிறார்கள் ..பலருக்கு அன்றாட வாழ்க்கையே மன உளைச்சல் காரணமாக நரகமாக அமைகிறது ..அமெரிக்காவில் கடன் கிடைப்பது எளிதல்ல ..கேசினோ போன்ற சூதாட்டங்களிலும் பங்கு சந்தையிலும் பணத்தை இழப்பது எளிது