உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இந்தியர்; துப்பு கொடுத்தால் ரூ.2.16 கோடி சன்மானம்

தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இந்தியர்; துப்பு கொடுத்தால் ரூ.2.16 கோடி சன்மானம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2.16 கோடி சன்மானம் வழங்கப்படும் என்று எப்.பி.ஐ., அறிவித்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல்,34, என்பவர் தனது மனைவி பலேக் படேல்,21, அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள டோனட் ஷாப்பில் வேலை செய்து வந்தார். கடந்த 2015ல் பணியில் இருந்த போது, மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். விசா காலம் முடிவடைந்ததால், கணவருடன் மீண்டும் இந்தியா திரும்ப பலக் படேல் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதற்கு பத்ரேஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பத்ரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தனர். ஆனால், கொலைக்கு பிறகு பத்ரேஷ்குமார் தலைமறைவானார். இந்த நிலையில், 10 தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பட்டியலில் பத்ரேஷ்குமாரின் பெயரை எப்.பி.ஐ., சேர்த்துள்ளது. அவர் அமெரிக்காவில் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கலாம். இல்லையெனில் கனடா அல்லது இந்தியாவுக்கு திரும்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் இந்திய மதிப்பில் ரூ.2.16 கோடி சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mohan
ஜன 18, 2025 08:25

என்ன ஒரு அறிவிலித்தனம்? தேடப்படும் குற்றவாளி குஜராத்தை சேர்ந்தவன் என்பதால் குஜராத்தையும் பாஜக ஆர்.எஸ்.எஸ் ஐ தேவையற்று சம்பந்தப்படுத்தி கருத்து விஷம் தடவும் விடியல் சம்பள ஆசாமிகளே, கஞ்சா, போதை பொருளோ, பாலியல் வன்கொடுமை ஆட்களோ பிடிபட்டால், ... விடியல் திராவிட மாடல் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆக இருக்கலாம் என கருத்து போடலாம் தானே, தேங்க்ஸ்.... இனி உங்க ரூட்டைப் பிடிச்சிக்கறோம்.


venugopal s
ஜன 17, 2025 17:31

நாக்பூரில் தலைமை அலுவலகத்தில் ஒளிந்து கொண்டு இருக்க வாய்ப்பு உள்ளது!


ராமகிருஷ்ணன்
ஜன 17, 2025 10:36

எங்க சின்ன அணிலை 2 வருஷமா தேடிக் கொண்டுள்ளனர். அவரை புடிச்சு கொடுங்க மொதல்ல. அப்புறம் இந்த ஆளை தேடலாம்.


Rangarajan Cv
ஜன 17, 2025 10:34

May be roaming in remote villages of Gujarat?


Ganapathy
ஜன 17, 2025 10:31

அவன் ஆப்பிரிக்காவிலோ அல்லது தென்அமெரிக்காவிலோ நுழைந்தால் அவனாக சரண்டரானாத்தான் உண்டு.


அப்பாவி
ஜன 17, 2025 08:41

இந்த நேரம் மூணு பாஸ்போர்ட் வெச்சுக்கிட்டு ஆப்ரிக்காவில் சுத்திக்கிட்டிருப்பான்.


sundarsvpr
ஜன 17, 2025 08:00

தலை மறைவாய் இருப்பவனை சுலபமாய் பிடிக்கமுடியாது. உலகில் நடமாடவிட்டு பிடிக்கவேண்டும்.இதற்கு வழிமுறை காணுவது நல்லது.


முக்கிய வீடியோ