உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமான விபத்தில் இந்திய வம்சாவளி பலி

விமான விபத்தில் இந்திய வம்சாவளி பலி

ரஸ்அல்-கைமா:ஐக்கிய அரபு எமிரேட்சில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயதான டாக்டர் உட்பட இரண்டு பேர் பலியாகினர்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் ரஸ் அல் - கைமா நகரைச் சேர்ந்தவர் சுலைமான் அல் மஜித், 26. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அந்நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு, டாக்டராக பணியாற்றிய சுலைமான், புத்தாண்டு தினத்தை குடும்பத்துடன் கொண்டாட திட்டமிட்டார்.இதற்காக, அங்குள்ள தனியார் விமான பயிற்சி நிறுவனத்தில் சிறிய ரக விமானத்தை வாடகைக்கு எடுத்து, அங்குள்ள சுற்றுலா தலங்களை வலம் வர திட்டமிட்டார். இதற்காக, பைலட் உட்பட இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய விமானத்தில் டிச.30ம் தேதி சுலைமான் பயணித்தார். அவரது பைலட்டாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பைலட் ஒருவரும் அந்த விமானத்தில் சென்றார்.புறப்பட்ட சில நிமிடங்களில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவசரமாக தரையிறக்க பைலட் முயற்சித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அதேஇடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணைக்கு அந்நாட்டின் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி