உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெள்ளை மாளிகையை தகர்க்க முயற்சி இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை

வெள்ளை மாளிகையை தகர்க்க முயற்சி இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்த முயன்ற இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலா, 20, என்ற இளைஞருக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் பிறந்தவர் சாய் வர்ஷித் கந்துலா. இவர், அமெரிக்காவின் க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெற்று மிசோரி மாகாணத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 2023, மே 22ல், டல்லஸ் நகருக்கு விமானத்தில் வந்தார். அங்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, வாஷிங்டன் டி.சி.,க்கு ஓட்டி வந்தார். நேராக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு டிரக்குடன் வந்த சாய் வர்ஷித், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளியபடி முன்னேற முயன்றார். ஆனால், தடுப்பில் மோதி வாகனம் செயலிழந்தது. இதையடுத்து, டிரக்கில் இருந்து இறங்கிய சாய், தன் பையில் இருந்து ஜெர்மனியின் நாஜி கொடியை வெளியே எடுத்து பறக்க விட்டார்.அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், சாய் வர்ஷித் இந்த தாக்குதலுக்காக பல வாரங்களாக திட்டம் தீட்டியது தெரிந்தது.இந்த வழக்கில் சாய் வர்ஷித் குற்றவாளி என ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நேற்று மாவட்ட நீதிபதி தண்டனையை அறிவித்தார். அப்போது, 'ஜனநாயகப் பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அரசை அகற்றிவிட்டு, நாஜி கொள்கையான சர்வாதிகாரத்தை கொண்டு வருவதே தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sivakumar Thappali Krishnamoorthy
ஜன 18, 2025 10:27

இவன் எப்படி இந்தியா வம்சாவளி ஆவான் ?


nisar ahmad
ஜன 18, 2025 15:06

கமலா ஹாரீஸ் எப்படி இந்திய வம்சாவழியோ ரிஷி சுனக் எப்படிஇந்திய வம்சா வழியோ அதை போல தான்.


Sampath Kumar
ஜன 18, 2025 09:36

நாஜி கோடியை பறக்க விட்டாரு சரி ஹிட்லரிசம் முடிந்து போச்சு என்றார்கள் அது இன்னும் உயரிப்புடன் தான் உள்ளது போல அது சரி இந்திய இளையங்கர் ஒருவாறு இப்படி செய்து உள்ளார் என்றால் தப்பு இந்தியாவுக்குள் தான் ஒளிந்து உள்ளது அதுவும் ஆந்திராவில் நஸ்ட்லைட் இயக்கம் அதீதமாக பரவி உள்ளது ஒரு காலத்தில் பீப்பிள் வார் குரூப் என்ற அமைப்பில் நிறய இழையங்கள் சேர்த்து நெக்ஸாலைட்டே வேலையை கொண்டாலே ரெட்டி என்பர் செய்து வந்தார் ஒருவேளை அதன் நீட்சியாக இது தொடர்கிறது போலும்


அப்பாவி
ஜன 18, 2025 08:57

2023 மே மாதம் நடந்த சம்பவத்துக்கு 18 மாதங்களில் தண்டனை குடுத்துட்டாங்க. மேல் அப்பீல் எல்லாம் இருக்காது. இதுவே நம்ம கோர்ட்டா இருந்தா முன்சீப் கோர்ட், செசன்ஸ் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட்னு போய் 2075 ல கூட வாய்தா வழங்கி, ஆயுசுக்கும் அவனை ஜாமீன்ல வெளியே உட்டு அவன் செத்தா தியாகியாக்கிருவாங்க.


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:48

பொதுவாக ஜெகஜால வித்தை செய்தாவது ஆந்திராவில் இருந்து செல்பவர்கள் கிறீன் கார்டு வாங்கிவிடுவார்கள். ஆனல் வேலையே செய்யாமல் தப்பிக்க முடியாது என்பதால் ஏராளமாக வேலைகளை மாற்றுவார்கள். சொதப்பிகள் என்று கூட சொல்லலாம். இதுவும் கூட ஒரு வகை.


Barakat Ali
ஜன 18, 2025 07:26

தீர்ப்பு சொன்னவாறு சிரிப்பு சட்சு ஐயாங்களா ???? அவரை நம்ம நாட்டு உச்சத்துல இழுத்து போடுங்க .....


Matt P
ஜன 18, 2025 04:56

அமெரிக்கா போய் கிறீன் கார்டு வாங்கி ஜெயிலுக்கு போயி சாதிச்சிட்டான். நாம் வாழ்வதே வெளிநாடு. எல்லாம் கிறீன் கார்டு கிடைக்கும் வரைக்கும் தான் ஒழுங்கா பய பக்தியோடு இருக்காங்க.


தாமரை மலர்கிறது
ஜன 18, 2025 01:55

சீமான் போன்று சுயவிளம்பரம் தேடுபவராக இருப்பார் போலிருக்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை